twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறைச்சு வச்ச நீண்ட நாள் காதல்... இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்திய நடிகை ஆன்ட்ரியா

    |

    சென்னை : நடிகை ஆன்ட்ரியா தனது சிறப்பான நடிப்பு மற்றும் பாடல்களால் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

    இவர் இறுதியாக மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்துள்ளார். தற்போது அரண்மனை 3 மற்றும் பிசாசு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    ரவுடி பிக்சர்ஸ் வெளியிடும் ராக்கி ஓடிடியில் வெளியாகிறதா? ரவுடி பிக்சர்ஸ் வெளியிடும் ராக்கி ஓடிடியில் வெளியாகிறதா?

    இதனிடையே தன்னுடைய நீண்ட நாள் காதல் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

    சிறப்பான நடிப்பு மற்றும் பாடல்கள்

    சிறப்பான நடிப்பு மற்றும் பாடல்கள்

    நடிகை ஆன்ட்ரியா தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். தனது சிறப்பான நடிப்பு மற்றும் பாடல்களால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தற்போது அரண்மனை 3 மற்றும் பிசாசு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    புத்தகங்கள் மீது காதல்

    புத்தகங்கள் மீது காதல்

    இந்நிலையில் நீண்ட நாட்களாக தான் மறைத்து வைத்திருந்த தன்னுடைய காதலை அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் சிறுவயதில் இருந்தே புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆசையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    சிறுவயது பொழுதுபோக்கு

    சிறுவயது பொழுதுபோக்கு

    தன்னுடைய சிறுவயதில் தன்னுடைய பெற்றோர் சினிமாவிற்கெல்லாம் அழைத்து செல்ல மாட்டார்கள் என்றும் அதனால் தங்களின் ஒரே பொழுதுபோக்கு புத்தகங்கள்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் புத்தகங்களை தேடி தேடி படித்ததாகவும் தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் உள்ளிட்ட புத்தகங்களும் தன்னுடைய விருப்பத்திற்குரியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Recommended Video

    Cook with comali Dharsha Gupta செய்த பாராட்டுக்குரிய செயல் | Help Hungers
    அழ மற்றும் சிரிக்க வைத்த புத்தகங்கள்

    அழ மற்றும் சிரிக்க வைத்த புத்தகங்கள்

    இதன்மூலமே தான் வெளியுலகை அடையாளம் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தன்னுடைய விருப்பத்திற்குரிய சில புத்தகங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். ஹார்பர்லீ புத்தகம் தன்னை அழ செய்ததாகவும் பிஜிவோட் ஹவுஸ் தன்னை சிரிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்

    புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்

    அனைத்து பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அவர்களின் சிந்தனை திறனை சிறப்பாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதை காட்டிலும் புத்தகங்களில் நுழைப்பது சிறப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Its never too late to pick up a book and start reading -Andrea
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X