அவர் ஹீரோ.. நீங்கதான் ஹீரோயின்.. நடிகை ஆண்ட்ரியாவை கமிட் பண்ண வந்த டுபாக்கூர் தயாரிப்பாளர்!

By

சென்னை: வெப் சீரிஸ் தயாரிப்பதாக போலி தயாரிப்பாளர் ஒருவர், நடிகை ஆண்ட்ரியாவை கமிட் பண்ண வந்த தகவல் தெரியவந்துள்ளது.

ஆண்ட்ரியா, பாடகியாகவும் நடிகையாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை ஆண்ட்ரியா, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

பச்சைக்கிளி முத்துச்சரம்

பச்சைக்கிளி முத்துச்சரம்

தமிழில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள அவர், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், கமலின் விஸ்வரூபம், உத்தமவில்லன், தரமணி, வடசென்னை உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். சுந்தர்.சியின் அரண்மனை 3 உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். வடசென்னை படத்தில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் ஆண்ட்ரியா வீட்டுக்குச் சென்றிருந்தார். இருவரும் சந்தித்து பேசியிருந்தனர்.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

ஆண்ட்ரியா, வீட்டில் கேக் தயாரித்து அவருக்கு பரிமாறினார். இதுபற்றிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஆண்ட்ரியா. இது வைரலானது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவை சிலர், விஜய் தேவரகொண்டா பெயரைச் சொல்லி
ஏமாற்ற முயன்றுள்ளனர். இந்த தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

எச்சரிக்கையாக

எச்சரிக்கையாக

ஆண்ட்ரியாவும் தன்னை சிலர் ஏமாற்ற முயன்றதாகச் சொன்னார். கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் விஜய தேவரகொண்டா சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் தனது பெயரில் படம் தயாரிக்கப் போவதாக சிலர் ஏமாற்றி வருவதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறப்பட்டிருந்தது.

வெப்சீரிஸ் தயாரிக்கிறேன்

வெப்சீரிஸ் தயாரிக்கிறேன்

இந்நிலையில் ஆண்ட்ரியா கூறியிருப்பதாவது: பெண்கள் என்றாலே ஏமாந்து போகிறவர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அதுபோலதான் ஒருவர் தன்னை தயாரிப்பாளர் எனச் சொல்லிக் கொண்டு என்னிடம் வந்தார். வெப்சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கிறேன். விஜய் தேவரகொண்டா நடிக்கிறார்.

Recommended Video

Andrea Jeremiah special dedication for Chennai Police | Andrea
எல்லாம் பொய்

எல்லாம் பொய்

நீங்கள்தான் ஹீரோயின் என்றார். கதை சொல்வதற்காக இயக்குனரும் வருவார் என்றார். ஆனால் அது எல்லாம் பொய் என்பது பிறகு தெரிந்தது என்று கூறியுள்ளார். இதே போல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் தன்னிடம் உதவியாளராக இருந்தவர் ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X