கையில் கத்தி.. கண்ணில் வெறி.. ரத்தக்களரியுடன் ஆன்ட்ரியா.. கா டீஸர் ரிலீஸ்!
சென்னை : பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா முதன் முதலாக மெயின் ரோலில் நடிக்கும் "கா" படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
Recommended Video
சர்ச்சைக்கு பேர் போன பல நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை ஆண்ட்ரியா. தற்போதுக்கூட ஆண்ட்ரியாவின் லிப் லாக் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்னர் இந்த வீடியோ அவள் என்ற படத்தில் சித்தார் மற்றும் ஆண்ட்ரியா நடித்த படக்காட்சி என்று கூறப்பட்டது.
நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் தான் 'கா' . அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. ஆண்ட்ரியா கையில் கத்தியுடன் புல் ஆக்ஷன் களத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க புகுந்து விளையாடியிருக்கிறார்.

துணிச்சலான பெண் கதாபாத்திரம்
மயக்கும் குரல்வலம், அசரவைக்கும் அழகு, நல்ல உயரம் என பார்த்தவுடனே வசீகரிக்கும் பெண் ஆண்ட்ரியா, சவாலான படங்களை எடுத்து நடிக்கும் ஒரு சில கதாநாயகிகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர் அதற்கு எடுத்துக்காட்டு ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, துப்பறிவாளன். ஒவ்வொரு படத்திலும் இவர் பெயர் தெரியும் படியே இவர் நடித்து இருப்பார். தனக்கென ஒரு தனித்துவம் காட்டுவதில் தலைசிறந்தவர் என்றே சொல்லலாம்.

நாயகி கதை சர்ந்த படங்கள்
சமீப காலமாக ஹீரோயின் பேஸ்ட் படங்கள் அதிகமாக வர தொடங்கிவிட்டது. அதில் சிலவை வெற்றியும் சிலவை தோல்வியும் கண்டிருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் மிகப்பெரிய வெற்றி கண்டது . அதேசமயம் த்ரிஷா நடித்த மோகினி தோல்வியை தழுவியது. இந்த வரிசையில் குயின், தப்பட், ராட்சசி, பொன்மகள் வந்தாள் என ஹீரோயின் பேஸ்ட் படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே போகும் இதில் இப்போது நமது ஆண்ட்ரியாவும் இணைந்திருக்கிறார்.

நடு காட்டில் மாட்டிக்கொள்ளும் பெண்
இந்த படத்தை புதுமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கியிருக்கிறார், சுந்தர் C பாபு அதற்கு இசையமைத்துள்ளார். ஆண்ட்ரியா முதன் முதலாக மெயின் ரோலில் ஒரு வைல்ட்லைப் போட்டோகிராபராக நடித்திருக்கிறார். இவருடன் சலீம் கோஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த டீசரில் இவர் விலங்குகளை படம் பிடிக்க போய் தனியா ஒரு காட்டுக்குள் மாட்டிக்கொண்டு பின் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த படத்தின் விறுவிறு கதை.

மிரட்டும் சண்டைககாட்சி
நேற்று மாலை 5 மணிக்கு வெளியான கா படத்தின் டீஸர். மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இந்த டீஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டீஸர் தொடங்கியது முதல் முடியும் வரை ஒரே ரத்தக்களமாக காட்சியளிக்கிறது. டீஸரின் கடைசி கட்சியில் ஆண்ட்ரியா கையில் கத்தியுடன் கண்ணில் வெறியுடன் ஓடிவருவார் அதோடு டீஸர் முடிவடையும். நடிகர்களுக்கும் நிகராக இவரும் சண்டைக்காட்சிகளில் மிக சர்வ சாதாரணமாக அதிரடி காட்டியுள்ளார். இந்த படத்தை ஜான் மேக்சஸின் சலோம் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

மனதளவில் பாதிப்பு
சில மாதங்களாகவே காதல் விவகாரத்தால் கொஞ்சம் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார் ஆண்ட்ரியா. இந்த டிப்ரஷனில் இருந்து மீண்டு வர அவர் தனியார் மருத்துவ ஆலோசனையும் பெற்று வந்தார். இத்தருணத்தில் கா படத்தின் டீஸர் வெளியானதில் கண்டிப்பாக அவருக்கும் ஒரு புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் கிடைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

பல படங்கள் கை வசம் உள்ளன
கா படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் மாஸ்டர், வட்டம், அரண்மனை 3, மற்றும் மாளிகை போன்ற படங்கள் ஆண்ட்ரியாவின் கெரியரில் ரிலீஸ்காக உள்ளன. ரசிகர்கள் இவரது வரவுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த கா படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் ஏறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல நடிகைகள் காதல் தோல்விகளை சந்தித்தாலும், அவர்களது வாழ்க்கையில் வெற்றி பெரும் அளவிற்கு புது புது விஷயங்களை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். உதாரணத்திற்கு த்ரிஷா ,நயன்தாரா அந்த வரிசையில் தற்போது ஆண்ட்ரியாவும் சேர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











