பப்பியை டம்புலாக மாற்றி ஒர்க்கவுட் செய்த முன்னணி தமிழ் நடிகை!

சென்னை : இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது இதில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு வெயிட்டான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என உறுதி எடுத்துள்ள இவர் கா மற்றும் நோ என்ட்ரி போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வீட்டில் முழு ஓய்வில் இருக்கும் ஆண்ட்ரியா தான் வளர்க்கும் பப்பியை டம்புலாக பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பல முகங்களை

பல முகங்களை

துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா பலருக்கும் சவால் விடும் வகையில் பாடகியாகவும் நடிகையாகவும் என பல முகங்களை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

நடிக்க போவதில்லை

நடிக்க போவதில்லை

வட சென்னை, தரமணி போன்ற திரைப்படங்கள் இவருக்கு நற்பெயரை கொடுத்ததை தொடர்ந்து சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான மாஸ்டர் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. அதனால் மிகுந்த அப்செட்டில் இருக்கும் ஆண்ட்ரியா இனி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

லீட் ரோலில்

லீட் ரோலில்

அரண்மனை 3, வட்டம்,நோ என்ட்ரி, கா, மாளிகை உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா பிசாசு பாகம்-1 வெற்றி பெற்றதை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு பாகம்-2 லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் பற்றி பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் உள்ளது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

குரானா இரண்டாவது அலை தற்பொழுது இந்தியா முழுவதும் வீரியம் கொண்டிருக்கும் நிலையில் ஆண்ட்ரியாவும் சமீபத்தில் குரானாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்பொழுது நோய் தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டுள்ள ஆண்ட்ரியா தான் வளர்க்கும் பப்பி நாயை டம்புலாக பயன்படுத்தி உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை அடுத்து இந்த க்யூட்டான வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X