Don't Miss!
- News
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய்யுடன் ஆண்ட்ரியா.. போட்டோவை வெளியிட்டது படக்குழு... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : நடிகை ஆண்ட்ரியா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதையொட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இயக்குனர் மிஸ்கின் நடிப்பில் உருவாகிவரும் பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து வரும் நிலையில், பிறந்தநாள் பரிசாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியிருந்தது படக்குழு.
படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பிரபல நடிகர்.. படக்குழு அதிர்ச்சி.. ஷூட்டிங் கேன்சல்!
விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், இதுவரை ஆண்ட்ரியா இருக்கும் புகைப்படங்கள் ஒன்றுகூட வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் பரிசாக விஜய்யுடன் ஒரு சீனில் வரும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளது மாஸ்டர் படக்குழு.

பெரும் ரசிகர்கள்
நடிகை ஆண்ட்ரியாவுக்கு தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளில் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்துவரும் நிலையில், பாடகியாக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இப்போது நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிப்புக்கு தீனி போட்ட
பச்சைக்கிளி முத்துச்சரம்,ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை,தரமணி உள்ளிட்ட திரைப்படங்கள் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு பெரும் தீனி போட்ட நிலையில் இப்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதிகமாக பார்க்கப்பட்ட
விரைவில் திரையில் கொண்டாடத் தயாராக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டு இதுவரை யூடியூபில் இருந்த அனைத்து சாதனைகளையும் சுக்குநூறாக உடைத்ததோடு குறைந்த நேரத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட தமிழ் டீசர் என்ற பெருமையையும் பெற்றது.

விஜய் ஆண்ட்ரியாவுடன் இருக்கும்
எதிர் பார்க்காத பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்க டீசரில் ஆண்ட்ரியா வரும் காட்சி ஒன்று கூட இடம் பெறவில்லை அதேபோல இவர் நடித்த எந்த ஒரு படத்தையும் வெளிவிடாமல் ரகசியம் காத்துவந்த படக்குழு இப்பொழுது விஜய் ஆண்ட்ரியாவுடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாழ்த்துக்கு மேல் வாழ்த்து
டிசம்பர் 21ஆம் தேதி ஆன நேற்று ஆண்ட்ரியா தனது பிறந்த நாளை கொண்டாடி வந்த நிலையில் ரசிகர்கள் பல திரைப்பிரபலங்கள் ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்துக்கு மேல் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் தற்பொழுது மிஸ்கின் இயக்கத்தில் தயாராகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஆண்ட்ரியாவுக்கு சர்ப்ரைஸாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது.

கோடான கோடி நன்றி
இந்த நிலையில் மாஸ்டர் படக்குழுவும் இதுவரை பார்த்திராத அட்டகாசமான போட்டோ ஒன்றை வெளியிட்டு ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி உள்ளது. அதில் ஒரு ஆடிட்டோரியமில் விஜய் மற்றும் ஆண்ட்ரியா அருகில் உட்கார்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியிருந்த படக்குழுவிற்கு கோடான கோடி நன்றிகளை ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.