ஆண்ட்ரியாவின் குரலில் ஆட்டம் போட வைத்த 5 பாடல்கள்.. கேட்டா மெர்சல் ஆயிடுவீங்க!
சென்னை: நடிகை ஆண்ட்ரியாவின் குரலில் ஆட்டம் போட வைத்த ஐந்து பாடல்கள் குறித்த ஓர் பார்வை..
Recommended Video
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். நடிகை மட்டுமின்றி பாடகியாகவும் உள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
திருமணம் ஆன நடிகருடன் கொண்ட தொடர்பால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறிய அவர், தற்போது விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது லாக்டவுன் என்பதால் தனது கிளாமர் போட்டோக்களையும் தான் பங்கேற்ற மேடை நிகழ்ச்சிகளின் போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். எனர்ஜிட்டிக் பாடகியான ஆண்ட்ரியா பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இந்நிலையில் அவர் பாடிய பாடல்களில் டாப் 5 குறித்து ஓர் பார்வை..

கண்ணும் கண்ணும் நோக்கியா
அந்நியன் படத்தில் இடம் பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலை பாடி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தார் ஆண்ட்ரியா. இந்தப் பாடல்தான் ஆண்ட்ரியா பாடிய முதல் பாடல். லெஸ்லி லூயிஸ் மற்றும் வசுந்தரா தாஸ் ஆகிய இரு நட்சத்திரங்களுடன் இணைந்து இப்பாடலை பாடினார். ஹாரிஸ் இசையின் ரொமான்டிக் வரிசையில் இதுவும் ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் மற்றும் சதா லீடிங் ரோலில் நடித்த பிளாக்பஸ்டர் தமிழ் படமான 'அந்நியன்' படத்தில் ஹிட்டடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

கற்க கற்க..
அடுத்து வேட்டையாடு விளையாடு.. இப்படத்தில் கற்க கற்க என்ற பாடலை பாடியிருந்தார் ஆண்ட்ரியா. கவுதம் மேனம் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்திருந்தார். இந்தப் பாடல் தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியாவுக்கு இரண்டாவது பாடல் ஆகும். இந்தப் பாடலின் ரெக்கார்டிங்கின் போது ஆண்ட்ரியாவை கவனித்த கவுதம் மேனன் தனது அடுத்தப்படமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

அடடா வா அசத்தலாம்..
ஆண்ட்ரியா குரலில் வெளியான அடுத்த அசத்தல் பாடல் அடடா வா அசத்தலாம்.. சர்வம் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலின் மூலம் இளையராஜாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பை பெற்றார் ஆண்ட்ரியா. ஆர்யா, திரிஷா நடிப்பில் உருவான இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார்.

நோ மனி.. நோ ஹனி..
வானம் படத்தில் இடம் பெற்ற நோ மனி நோ ஹனி என்ற பாடலை பாடியிருந்தார் ஆண்ட்ரியா. பெரும் வெற்றி பெற்றது இப்பாடல். சிம்பு - அனுஷ்கா ஷெட்டி இப்பாடலுக்கு தங்களின் அட்டகாச டான்சின் மூலம் கூடுதல் பலம் சேர்த்தனர். இந்த இடைப்பட்ட காலத்திலேயே கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்தார் ஆண்ட்ரியா.

கூகுள் கூகுள்..
ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலை விஜயுடன் இணைந்து பாடியிருந்தார் ஆண்ட்ரியா. இங்கிலிஷ் தமிழ் என கலந்துக்கட்டி கார்க்கியின் வரிகளில் உருவாக்கப்பட்ட இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் செம ஹிட்டானது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் - காஜல் அகர்வால் லீடிங் ரோலில் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











