“ஏமாற்றிய அந்த நடிகர் பெயரைச் சொல்லக் கூடாது”.. மிரட்டப்படுகிறாரா ஆண்ட்ரியா?

ஏமாற்றிய நபரின் பெயரை வெளியிடக்கூடாது என நடிகை ஆண்ட்ரியாவிற்கு மிரட்டல்கள் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

MeeToo Andrea : ஆண்ட்ரியாவை கொடுமைப்படுத்திய நடிகர்- வீடியோ

சென்னை: தன்னை ஏமாற்றிய அந்த நடிகரின் பெயரை வெளியிடக்கூடாது என நடிகை ஆண்ட்ரியாவிற்கு சிலர் மிரட்டல் விடுத்துள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டுமே நடிகை ஆண்ட்ரியா தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனாலேயே தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

தற்போது அவர் முறிந்த சிறகுகள் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியுள்ளார். அதில் திருமணமான நடிகர் ஒருவர் தன்னை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றியதால் உண்டான வலியைப் பதிவு செய்திருப்பதாக ஆண்ட்ரியா தெரிவித்திருந்தார்.

ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத சிகிச்சை

மேலும் தனது மன அழுத்தத்திற்காக ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார். ஆனால், தன்னை தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாக்கிய நபரைப் பற்றி வெளிப்படையாகக் கூற அவர் மறுத்து விட்டார். இதனால் ஆண்ட்ரியாவை ஏமாற்றியது இவர் தான் என பலரது பெயர்கள் இணையத்தில் வைரலானது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இந்நிலையில் தனது புத்தகத்தை மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட உள்ளார் ஆண்ட்ரியா. கடந்த 17ம் தேதி அதனை வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அப்போது தன்னை ஏமாற்றிய அந்த நடிகர் பற்றி அவர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டுமே நடைபெறவில்லை.

மிரட்டும் மர்மநபர்கள்?

மிரட்டும் மர்மநபர்கள்?

சம்பந்தப்பட்ட நபர் தரப்பில் இருந்து ஆண்ட்ரியாவிற்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாலேயே அவர், அந்நடிகரின் பெயரை வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால் இது எதற்கும் பதிலளிக்காமல் ஆண்ட்ரியா மௌனம் காத்து வருகிறார்.

என்ன காரணம்

என்ன காரணம்

முன்னதாக ஆண்ட்ரியாவை மன அழுத்தத்திற்கு ஆளாக்கிய நபர் பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என ஒரு தகவல் வெளியானது. எனவே ஆண்ட்ரியா வாய் திறந்தால் அது தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என்றும் கூறப்பட்டது இங்கே நினைவுகூரத் தக்கது. ஒருவேளை அதனால் ஆண்ட்ரியா அந்நபரின் பெயரை வெளியிட விடாமல் சதி நடக்கிறதா என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X