Keneeshaa: தாங்காத போதை எல்லாம் உன்னாலதான்.. செம ஆட்டம் போடும் கெனிஷா.. வீடியோவைப் பகிர்ந்த பிரபலம்

சென்னை: பாடகி கெனிஷா கடந்த சில மாதங்களாக டாக் ஆப் த டவுனில் இடம் பெற்று வருகிறார். அதற்கு காரணம் இவரது பாடல்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். மாறாக கெனிஷாவின் பெயர் நடிகர் ரவி மோகனின் விவாகரத்து வழக்குடன் சேர்த்து வைத்து பேசப்பட்டது தான். இந்நிலையில் கெனிஷா தனது ஆல்பம் பாடலான அன்றும் இன்றும் பாடலை ரிலீஸ் செய்துள்ளார். இது பலரது கவனத்தை பெற்றுள்ளது.

ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரத்தில் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், இவர்களின் நெருக்கம்தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் பலரும் பேசத்தொடங்கினார்கள். இது தொடர்பாக ரவி மோகன், மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை பேசினார். விவாகரத்து என்பது எனது தனிப்பட்ட வாழ்க்கை அது தொடர்பாக பேசவேண்டாம் என்றார். மேலும் கெனிஷாவும் தானும் நல்ல தோழர்கள், எதிர்காலத்தில் ஹீலிங் சென்டர் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார். அதன் பின்னர் சில மாதங்கள் எல்லாம் கப்சிப் என தான் இருந்தது.

நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் மற்றும் கெனிஷா ஒன்றாக பங்கேற்க ஆர்த்தி அதன் பின்னர் வெளியிட்ட அறிக்கை, அதற்கடுத்து ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை என அனைத்தும் இவர்களின் விவாகரத்து விவகாரத்தை ஊர் முழுவதும் பேசுவதைப் போல் ஆகிவிட்டது. இந்த பேச்சுக்களின் போது கெனிஷாவின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்தது. இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான கெனிஷா, இந்த விவகாரம் தொடர்பாக என்னை தேவையில்லாமல் கோர்த்து விடுகிறார்கள். எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிரட்டல்கள் விடப்படுகிறது. நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். தேவைப்பட்டால் நான் நீதிமன்றத்திற்கு வந்து என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் தர தயார். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விமர்சித்துக் கொண்டு இருக்காதீர்கள் என்று தெரிவித்தார்.

Andrum Indrum Album Song Singer Keneeshaa Dance With Therukural Arivu
Photo Credit:

ஆல்பம் பாடல்: மேலும் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட பின்னர் இவர்களின் விவாகரத்து விவகாரம் தொடர்பான பேச்சுகள் அடங்கியது. இந்நிலையில் கெனிஷா செம ஜாலியாக ஆட்டம் போடும் வீடியோவை ராப் பாடகர் தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கெனிஷாவின் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. ராப் பாடகர் அறிவு ஜாலியாக சிரித்துக் கொண்டு நடனம் ஆடுகிறார். அதேபோல் பாடகி கெனிஷாவும் ஜாலியாக நடனமாடுகிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, ராப் பாடகர் தெருக்குரல் அறிவு அதற்கு, " அமேசிங் எனர்ஜி" என்று கேப்ஷன் இட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: மேலும் இந்த பாடலின் சிறிய வீடியோவை கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். மேலும் பாடலின் வரிகள் தரமாக இருப்பதாகவும் கமெண்ட்டில் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X