அனேகன் ஷூட்டிங் முடிந்தது... ஆகஸ்டில் வெளியீடு?
தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தின் ஷூட்டிங் கிட்டத்த் முடிந்துவிட்டது. இந்தப் படம் ஆகஸ்டில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தனுஷ் - அம்ரியா தஸ்துர் நடிக்கும் படம் அனேகன். கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

இந்தப் படத்தின் பெரும்பாலான பகுதிகள் எடுக்கப்பட்ட நிலையில், தனுஷ் தனது இரணடாவது இந்திப் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.
படத்தின் பாடல் காட்சி மட்டும் பாக்கியிருந்த நிலையில், சமீபத்தில் மும்பையிலிருந்து சென்னை திரும்பிய தனு், அனேகன் ஷூட்டிங்கில் பங்கேற்று பாடல் காட்சியில் நடித்தார்.
இந்த வாரம் படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆகஸ்டில்தான் சூர்யாவின் அஞ்சான் படமும் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











