பாக்கெட்டில் 1 ரூபாய் இல்லை.. உனக்கு மிஸ் இந்தியா அழகி கேட்குதோ.. நடிகரை அசிங்கப்படுத்திய நடிகை வீடு
மும்பை: பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அங்கத் சிங் பேடி. 2004ஆம் ஆண்டு முதல் நடித்துவரும் அவர்; மிஸ் இந்தியா பட்டம் வென்ற நடிகை நேஹா தூபியாவை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தனது திருமணம் பற்றி பல விஷயங்களை சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் அங்கத் சிங் பேடி.
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் மகனான அங்கத் சிங் பேடி ஹிந்தியில் 2004ஆம் ஆண்டு வெளியான கயா தரன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்து தனக்கென இடத்தை பிடித்தார் அவர். அவருக்கும், மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும், நடிகையுமான நேஹா தூபியாவுக்கும் இடையே மலர்ந்த காதல் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார் அங்கத்.
அங்கத் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "டெல்லியில் ஒருமுறை ஜிம்முக்கு என்னுடைய நண்பர்கள் என்னை அழைத்து சென்றார்கள். அப்படியொரு ஜிம்மை அதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அப்போது அங்கு ஒரு பெண் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். அவரை காண்பித்து, அவர்தான் மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற நேஹா தூபியா என நண்பர்கள் சொன்னார்கள். தொடர்ந்து 3 நாட்கள் ஜிம்முக்கு போன நான்; சில காரணங்களால் நிறுத்திவிட்டேன்.

மும்பையில் நடந்த பார்ட்டி: பிறகு ஒருநாள் யுவராஜ் சிங் பார்ட்டி ஒன்றுக்கு என்னை அழைத்து சென்றார். அங்கே நேஹாவும் வந்திருந்தார். அப்போதுதான் முதன்முறையாக பேசினேன். பார் மூடியதால் அந்தப் பார்ட்டியை எங்கள் வீட்டுக்கு ஷிஃப்ட் செய்தோம். அப்போது நீங்களும் வீட்டுக்கு வாருங்கள் என்று நேஹாவை அழைத்தேன். அவரும் வந்தார். வீட்டுக்கு வந்ததும் ஜிம்மில் ஒன்றாக ஒர்க் அவுட் செய்ததை சொன்னேன். அப்படியே நண்பர்கள் ஆனோம்.
ஒன்றாக நடித்தோம்: பிறகு அன்கிலி படத்தில் ஒன்றாக நடித்தோம். அப்போது இன்னொரு படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டோம். நானும் நடித்தேன். அப்படி நடித்தபோது உங்களை எனக்கு பிடித்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டேன். அதுமட்டுமின்றி நான் பிரபலம் எல்லாம் கிடையாது. பணமும் இல்லை. ஆனால் நாம் திருமணம் செய்தால் சாதிப்பேன் என சொன்னேன். அவர் பதில் எதுவும் சொல்லாமல் அதை கடந்துவிட்டார்.
அசிங்கப்படுத்திய வீடு: ஷூட்டிங் முடிந்து டெல்லி வந்த பிறகு; அவரது வீட்டுக்கு சென்று உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா அவரது பெற்றோரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ நல்ல பையன். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பாக்கெட்டில் ஒரு ரூபாய் இல்லை. நீ மிஸ் இந்தியா பட்டம் வென்ற எங்கள் மகளை திருமணம் செய்ய வேண்டுமா என கேட்டார்கள். தொடர்ந்து நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். ஆளுக்கொரு வழியில் சென்றும் விட்டோம். இன்னொருவருக்கு என்னை ஜோடியாக்க தீபாவளி பார்ட்டிக்கு அழைத்தார் நேஹா. அங்கு இயக்குநர் கரண் ஜோஹரும் இருந்தார். அவர்தான் எப்படியோ நேஹாவிடமும் என்னிடமும் பேசி எங்களை சேர்த்து வைத்தார். இப்போது சந்தோஷமாக இருக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











