வாழ்க்கை மொத்தமும் வேதனை தான்.. அங்காடித் தெரு சிந்துவின் இறுதிச்சடங்கு எங்கே நடக்குது தெரியுமா?

சென்னை: அங்காடித் தெரு உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சிந்து என்கிற கெளரி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக பலரிடம் உதவி கேட்டு மன்றாடினார்.

ஒரு கட்டத்தில் மார்பக புற்றுநோய் முற்றிய நிலையில், இந்த உலகை விட்டே பிரிந்து விட வேண்டும் என்றும் அதுதான் தனது வலிகளுக்கு மருந்தாக அமையும் என்றும் பேசியிருந்தார்.

Angadi Theru actress Sindhu body will bury on Virugambakkam crematorium

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2.15 மணியளவில் நடிகை சிந்து காலமானது ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

வாழ்க்கை முழுவதுமே கஷ்டம் தான்: சிறு வயதில் இருந்தே நடிகை சிந்து வறுமையால் வாடி வந்த நிலையில், சினிமாவிலும் அவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. குடும்ப வாழ்க்கையிலும் சிக்கலை அனுபவித்த சிந்துவுக்கு கடைசியில் மிகப்பெரிய இடியாக மார்பக புற்றுநோய் அவரை தாக்கியது.

அந்த கொடிய நோயில் இருந்து தப்பிக்க பல முயற்சிகளை சிந்து மேற்கொண்டாலும், அவருக்கான உரிய சிகிச்சைகள் கிடைப்பதில் ரொம்பவே சிக்கல் ஏற்பட்டது. பல முன்னணி நடிகர்களிடமும் தனது சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என கேட்டிருந்தார் சிந்து. ஆனால், அவருக்கு சினிமா துறையில் இருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கவில்லை என்பதையே குற்றச்சாட்டாகவும் முன் வைத்து இருந்தார்.

உறவினர்கள் சாபம்: 10 நாட்களில் செத்துடுவன்னு என் சொந்தக்காரங்களே சாபம் விடுறாங்க என்றும் சமீபத்திய பேட்டியில் ரொம்பவே எமோஷனலாக பேசியிருந்தார் சிந்து. மேலும், சிகிச்சைக்கு பண உதவி கேட்டால், சிலர் வீடியோ காலில் வரியான்னு அசிங்கமா கேட்டாங்க என மனம் வெந்து பேசியிருந்தார்.

இந்நிலையில், நடிகை சிந்துவுக்கு சில நெருங்கிய சினிமா நண்பர்கள் உதவிகளையும் செய்து வந்தனர். ஆனால், கடைசியில் அவரை எதுவுமே காப்பாற்ற முடியாமல் போக இன்று காலை 2.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்து விட்டது என நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விருகம்பாக்கம் இடுகாட்டில் இறுதிச்சடங்கு: நடிகை சிந்துவின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று மாலை 3.30 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X