அங்காடி தெரு நடிகைக்கு இப்படி ஒரு சோகமா.. வயிற்றிலேயே இறந்துபோன குழந்தை.. 8வது மாதத்தில் கரு கலைப்பு

சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு திரைப்படம் கோலிவுட்டில் முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. துணி கடையில் வேலை செய்யும் பணியாட்களின் துயர் மிகுந்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டிய வசந்தபாலம் அந்தப் படத்துக்கு விருதுகளையும் பெற்றார். இந்நிலையில் அந்தப் படத்தில் சோஃபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சுகுணா நாகராஜனின் இப்போதைய நிலைமை குறித்து தெரியவந்திருக்கிறது.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்தபாலன் அங்காடி தெரு படத்தை இயக்கி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர். அவர் அதற்கு முன்னதாக இயக்கியிருந்த வெயில் திரைப்படமும் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவர் கொடுத்த இந்தப் படம் வெயிலைவிடவும் அதிகமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மகேஷ், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் சேர்ந்து இசையமைத்தார்கள்.

துயர் மிகுந்த வாழ்வியல்: துணி கடைகளில் வேலை செய்யும் நபர்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்திக்கும் ஏமாற்றங்கள், வலிகள், காதல் என அத்தனையையும் எவ்வித அலங்காரமுமின்றி அப்படியே மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தார் பாலன். முக்கியமாக அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் துணி கடையில் வேலை செய்பவர்கள் வாழ்க்கையில் இத்தனை துயரங்கள் தோய்ந்திருக்கின்றன என்பது அனைவருக்குமே தெரிந்தது.

Angadi Theru actress Suguna Nagarajan had an abortion in the 8th month

தமிழ்நாடு அரசு செய்தது: அதுமட்டுமின்றி அந்தப் படம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது போலவே; அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கவனத்தையும் ஈர்த்தது. அங்காடி தெரு முக்கியமான திரைப்படம் என்று சட்டப்பேரவையில் பேசினார்; மேலும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் துணி கடைகளில் தமிழ்நாடு அரசு அதிரடி சோதனையையும் நடத்தியது. இப்படி பல பெருமைகளை கொண்டிருக்கிறது அப்படம்.

சுகுணா நாகராஜன்: அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த மகேஷ், ஹீரோயினாக நடித்த அஞ்சலி உள்ளிட்டோர் தங்களது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்கள் தவிர்த்து மற்றவர்களும் புதுமுகங்களாக இருந்தாலும் அசால்ட்டாக நடித்து ஸ்கோர் செய்தார்கள். அதிலும் சோஃபி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த சுகுணா நாகராஜன் தனது நடிப்பில் பட்டையை கிளப்பினார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் பெரிதாக நடிக்கவில்லை.

என்ன ஆனது?: அவர் தொடர்ந்து நடிக்காமல் போனதற்கு திருமணம்தான் காரணம். அங்காடி தெரு படத்தில் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். அவர் தொடர்ந்து நடித்திருந்தால் இன்று முக்கியமான குணசித்திர நடிகைகளில் ஒருவராகவோ அல்லது காமெடி நடிகையாகவோ வலம் வந்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

சுகுணா பேட்டி: இந்நிலையில் சுகுணா நாகராஜன் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "எங்களுக்கு திருமணம் முடிந்து கர்ப்பமாக இருந்தேன். ஆனால் 8ஆவது மாதமே கருக்கலைப்பு செய்துவிட்டேன். வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்டதால் அந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த வலியிலிருந்து மீண்டுவர எனது கணவர்தான் உறுதுணையாக இருந்தார். பிறகுதான் மகன் பிறந்தான். நான் கருப்பாக இருப்பதால்தான் என்னை பலரும் ஒதுக்கினார்களோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது. என்னை யாருமே நேசிக்கவில்லை என தோன்றியது. ஆனால் திருமணம் முடித பிறகு அந்தக் காதலால் எல்லாமே மாறிவிட்டது. இப்போது பியூட்டி பார்லர் வைத்திருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X