அங்காடித் தெரு 'மகேஷ் நடிக்கும் 'ஏவாள்' ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர்...ஸ்பெஷல் அப்டேட்

சென்னை:'ஏவாள்' படத்தில் பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம்.

இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட சில பங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

5 கதாநாயகிகள்

5 கதாநாயகிகள்

இந்த படத்தில் பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் 3 படங்களும் , தமிழில் 2 படங்களில் நடித்துள்ளவர்.இவர் இப்படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி பல நடிகைகள் இணைந்து மொத்தமாக 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

முதலிடமும் பெற்ற ப்ரவீன்

முதலிடமும் பெற்ற ப்ரவீன்

நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்தை இயக்கி இருப்பவர் ஜித்தேஷ் கருணாகரன் .RA1என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இந்த 'ஏவாள்' படத்தை AVS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல் ரவி தயாரித்துள்ளனர்.இணைத் தயாரிப்பு மது ஜி , மற்றும் எஸ்.எஸ்.பிரபு. திரைக்கதை ரஞ்சித் ராகவன், வசனம் பாடல்கள் முருகன் மந்திரம், ஒளிப்பதிவு கிருஷ்ணா பி.எஸ், இசை ரெஜிமோன், படத் தொகுப்பு அனந்து எஸ். விஜய்.

படத்தின் ஒன்லைன் கதை

படத்தின் ஒன்லைன் கதை

தனது காதலியின் திடீர் மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது.அவனைப் பழி வாங்க புறப்படுகிறான் நாயகன்.இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன.இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம் தான் 'ஏவாள்'.படத்தின் திகில் காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

வாழ்வியல் பயணம்

வாழ்வியல் பயணம்

இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, பாலக்காடு,குட்டிக்காணு, பீர்மேடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது .படத்தில் ஒரு வாழ்வியல் பயணம் சார்ந்த பாடல், டூயட் பாடல் என்று இரு பாடல்கள் உள்ளன .படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மோதும் காட்சிகள் பரபரப்பை ஊட்டும் என்று படக்குழு தெரிவித்து வருகிறது .இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள ஏவாள் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X