புற்றுநோயுடன் போராடிய போதும் மற்றவர்களுக்கு உதவிய சிந்து..கடவுளே..என்ன கொடுமை இது?

சென்னை: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அங்காடித் தெரு சிந்து இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் நடிகை சிந்து.

angadi theru sindhu passed away due to breast cancer

ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் அங்காடித்தெரு தான். இந்த படத்தில், ஒரு சிறிய ரோலில் இவர் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரமும், அவர் பேசிய வசனமும் ரசிகர்கள் மனதில் நச் என்று பதிந்துவிட்டதால், அன்றிருந்து அங்காடித்தெரு சிந்துவாக அழைக்கப்பட்டு வருகிறார்.

அங்காடித்தெரு சிந்து: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல சிகிச்சைகளை மேற்கொண்ட சிந்து, உதவி கேட்டு யூடியூப் சேனலில் பேசியிருந்தார். அதில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். நோய் தாக்கம் அதிகமானதால் ஒரு பக்க மார்பகத்தை அகற்றிவிட்டனர். தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் நடிகை சிந்துவால் கேன்சர் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை.

சிகிச்சைக்கு பணமின்றி தவித்த சிந்து: அவரின் இன்னொரு மார்பகத்திலும் புற்றுநோய் பரவிவிட்டது, மேலும், கீமோதரப்பி செய்து செய்து ஒரு கை முற்றிலுமாக செயலிழந்து படுத்த படுக்கையாகிவிட்டார். கேன்சருக்கு யார் யார் என்னென்ன மருத்துவம் சொன்னாங்களோ அதை எல்லாம் செய்தும் சரியாததால், நரகவாழ்க்கை வாழ்ந்து வந்தார். மருத்துவ செலவுக்கு என்னிடம் பணம் இல்லை உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

இன்று உயிரிழந்தார்: இந்நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்து இன்று அதிகாலை 2.15மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். சிந்துவின் மரணம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த கடவுளுக்கு கண் இல்லையா? அங்காடித்தெரு சிந்து தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது, தனக்கு மருத்துவசெலவுக்காக வந்த பணத்தையும் கொரோனா நேரத்தில் வேலை இல்லாமல் தவித்த குடும்பத்திற்கு கொடுத்து உதவி செய்து இருக்கிறார். புற்றுநோய் பாதிப்பு அதிகமான நேரத்திலும், தன்னைப்போல் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து இருக்கிறார். கடைசி நேரத்திலும் மற்றவர்களுக்கு உதவி செய்த சிந்து இப்படி ஒரு நிலைமையா? அந்த கடவுளுக்கு கண் இல்லையா? என பலர் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X