'அங்காடித் தெரு' சிந்துவுக்கு புற்றுநோய்.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்..உதவி கேட்டு உருக்கம்!
சென்னை: நடிகை 'அங்காடித் தெரு' சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவி கேட்டு நடிகர் பிளாக் பாண்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம், அங்காடித் தெரு.
இதில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ், பிளாக் பாண்டி உள்பட பலர் நடித்திருந்தனர்.

மார்பகப் புற்று நோய்
இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சிந்துவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை அடுத்து பல படங்களில் நடித்து சிந்து, டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைப் பெற்று வரும் அவர், மருத்துவ சிகிச்சைக்கு பண உதவியை எதிர்பார்க்கிறார்.

பிளாக் பாண்டி
இதுதொடர்பாக அவரைப் பார்க்கச் சென்ற நடிகர் பிளாக் பாண்டி, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை 'அங்காடித் தெரு' சிந்து கூறியிருப்பதாவது: வணக்கம். நான் நல்லாதான் இருந்தேன். கொரோனா காலத்துல நிறைய பேருக்கு உதவி பண்ணியிருக்கேன். சினிமா ஃபீல்ட்ல இருந்தவங்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே பண்ணியிருக்கேன்.

கடன் வாங்கி ஆபரேஷன்
கொரோனா பிரச்னைக்கு முன்னாடியே எனக்கு இந்த பிரச்னை இருந்தது தெரியும். ஆஸ்பிடல் போனோம். இப்ப கொரோனா நேரத்துல ஆபரேஷன் பண்ண மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அதை அப்படியே விட்டதால இப்ப அதிகமாயிடுச்சு. எனக்கு என்ன பிரச்னைன்னா மார்பக
புற்றுநோய். பிறகு கடன் வாங்கி ஆபரேஷன் பண்ணி, அதை நீக்கியாச்சு.

கீமோ சிகிச்சை
ஆபரேஷனுக்கு பிறகுதான் கொடுமையா இருக்கு. ஒவ்வொரு இன்ஜெக்ஷனும் 9,500 ரூபாய், 5, 500 ரூபாய்னு இருக்கு.. ஏகப்பட்ட செலவு. இன்னும் கீமோ சிகிச்சை போகும்னு டாக்டர்கள் சொல்றாங்க. இப்ப மார்புல மட்டும் 5 சதவிதம் இருக்கு. அதுக்குப் பிறகு பைனல் கார்ட்ல வேற பாதிப்பு ஏற்பட்டிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.

காணாம போயிட்டாங்க
நான் நிறைய பேருக்கு உதவி பண்ணியிருக்கேன். என்னைச் சுத்தி ஒரு கும்பலே இருந்தது. எனக்கு கஷ்டம்னு ஆஸ்பிடல்ல படுத்ததும் எல்லாருமே காணாம போயிட்டாங்க. மனரீதியாகவும் பணரீதியாகவும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். மருத்துவச் செலவுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன். எனக்காக உதவி பண்ணுங்க.

மருந்து மாத்திரைகளுக்கு
நான் இதுல இருந்து மீண்டு வந்தன்னா, நிறைய பேருக்கு உதவி பண்ணுவேன். என் கூட பழகினவங்களுக்கு என்னைப் பத்தி தெரியும். எனக்கு நடிகர் கார்த்தி, சாய் தினா, ஐசரி கணேஷ், ரோபோ சங்கர், சோனியா போஸ் வெங்கட், டேனியல், தீபா, சவுந்தர்..இவங்கள்லாம் உதவி பண்ணியிருக்காங்க.

மருந்து மாத்திரை
எனக்கு இன்னும் மருந்து மாத்திரைகளுக்குப் பண உதவி தேவைப்படுது. எனக்கு கண்டிப்பா உதவி பண்ணுங்க. இவ்வாறு அவர் கூறியுள்ளார். வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் அந்த வீடியோவில் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு சினிமா துறையினரின் குரூப்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











