எனக்காகவே வாழ்ந்தாங்க.. சாவுக்கு காரணமே நான் தான்.. அம்மாவை நினைத்து கதறி அழும் சிந்துவின் மகள்!

சென்னை: அம்மா இறந்ததற்கு காரணமே நான் தான் என்று நடிகை சிந்துவின் மகள் கதறி அழுதபடி பேட்டி கொடுத்துள்ளார்.

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான அங்காடித்தெரு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து.

angadi theru sindhus daughter Pavithra emostional interview

நடிகை சிந்துவிற்கு திடீரென்று புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறினார்.

உயிரிழந்தார்: நடிகை சிந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு வசதி இல்லாததால் இவர் தனது வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த நிலையில், அவரது உடல் நிலை மிகவும் மோசமானதை அடுத்து சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

உடல்நிலை மோசமானது: இந்நிலையில், சிந்துவின் மகள் பவித்ரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அம்மாவிற்கு கடந்த 3 மாதமாகவே உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது அவங்களால் சாப்பிடவே முடியவில்லை. அம்மாவை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்தோம். அங்கு போதிய வசதி இல்லாதால் சென்னை ஜிஎச் மருத்துவமனைக்கு அழைத்துப்போக சொன்னார்கள்.

பிரைன் டெத்: அம்மா அங்குபோக விரும்பாததால், கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். அம்மாவுக்கு லங்சில் கட்டி மற்றும் தண்ணீர் இருந்ததால் அதை எடுத்தார்கள். அதன் பின் அம்மாவின் கிட்னி செயலிழந்து விட்டதால் ,ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்பட்டு கடைசியில் பிரைன் டெத்தாகி கண் மட்டும்தான் அசைத்தது என்னைப் பார்த்துக் கொண்டே இறந்துவிட்டார்கள்.

தினம் செத்துக்கொண்டு இருக்கிறேன்: என் கணவர் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அம்மாதான் எல்லாம் என்று நினைத்து இருந்தேன் அவங்களும் என்னைவிட்டு போய்விட்டார்கள். இனி நான் குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி வாழப்போகிறேன் என்று தெரியவில்லை. நான் மட்டும் என் அம்மாவை விட்டு போகாமல் இருந்து இருந்தால், என் அம்மா இறந்து இருக்கமாட்டார்கள். அதை நினைத்துத்தான் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறேன் என்று சிந்துவின் மகள் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X