இதுதான் கதாபாத்திரம்.. கதை கேட்டதும் ஓகே சொன்னார்.. விஜய் படத்தில் மல்லுவுட்டின் மாஸ் ஹீரோ!

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 64வது படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரங்கள் குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் விஜயின் 64வது படம்தான் தற்போது கோலிவுட் முழுக்க பேச்சாக இருக்கிறது. பேட்ட படம் போலவே நிறைய ஹீரோக்கள் உடன் இந்த படம் தயாராகி வருகிறது.

விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. அடுத்த வருடம் மே மாதத்திற்கு இந்த படம் குறி வைக்கப்பட்டுள்ளது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அதேபோல் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ராஷி கண்ணா, ரஷ்மிகா மந்தனா, யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர்.

தளபதி 64

தளபதி 64

இந்த நிலையில் தற்போது தளபதி 64 படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று மாலைதான் வெளியானது. ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் வருகிறார்

யார் வருகிறார்

ஆண்டனி வர்கீஸ் மலையாளத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர். இவர் நடித்த அங்கமாலி டைரிஸ் படம் கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அதேபோல் இவரின் சுதந்திரம் அர்த்த ராத்திரியில் படமும் மாஸ் ஹிட் படமாக மாறியது.

இப்போது எப்படி

இப்போது எப்படி

இந்த நிலையில்தான் தற்போது ஆண்டனி வர்கீஸ் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். விஜய் நடிக்கும் இந்த 64வது படத்தில் இன்னொரு வில்லனாக ஆண்டனி வர்கீஸ் நடிக்கிறார். ஆனால் இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் படத்தில் தொடர்பு இருக்காது. இது முக்கோண கதை என்று கூறுகிறார்கள்.

மூன்று கதைகள்

மூன்று கதைகள்

படத்தின் கதை கேட்டதும் இவர் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. மூன்று வெவ்வேறு கதைகள் சந்திக்கும் புள்ளிதான் இந்த படம். அதை வைத்துதான் நிறைய திருப்பங்கள் நடக்கும். இரண்டு வில்லன் ஒரு ஹீரோ என்று இந்த படம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X