நடிகை ஏஞ்சலாவின் எக்குத்தப்பு போஸ்.. 'கண்ணைத் திருப்ப முடியலைன்னா பாருங்களேன்'.. வழியும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அனுஷ்கா ஷெட்டி, ஆர்யா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், ஏஞ்சலா கிறிஸ்லின்ஸ்கி.
தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்துக்குப் பிறகு, புரி ஜெகநாத் இயக்கிய Rogue படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார்.

ஜோதிலட்சுமி
முன்னதாக, புரி ஜெகநாத்தின் ஜோதிலட்சுமி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படத்தை நடிகை சார்மி, தயாரித்து ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பில்லாததால் இந்தி சினிமாவுக்குச் சென்றார். அங்கு, விக்ரம் பட் இயக்கிய 1921 படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் கவனிக்கப்பட்டது.

மீயூசிக் வீடியோ
பிறகு ஆகாஷாத்யா லாமா இயக்கிய தவுபா தேரே ஜல்வா படத்தில் நடித்திருந்தார். அமீஷா படேல் ஹீரோயினாக நடித்த இதில் ரிங்கு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பின்னர் அனில் கபூர், திஷா பதானி நடித்த மலங்க் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர், பல மீயூசிக் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன்
இவர், சிறந்த நடனக் கலைஞர் ஆவார். பல நடன நிகழ்ச்சிகளும் பங்கேற்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடிகர், நடிகைகள் இப்போது வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கின்றனர். கடந்த 6 மாதமாக அவர்கள் எங்கும் செல்லாததால், சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

கிளாமர் ஸ்டில்ஸ்
சில நடிகைகள் தங்களுடைய ஒர்க் அவுட், நடனம், யோகா மற்றும் கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் த்ரோபேக் ஸ்டில்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு ரசிகர்களும் கன்னா பின்னாவென்று லைக்ஸ்களையும் கமென்ட்ஸ்களையும் அள்ளிக் குவிக்கின்றனர். தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஏஞ்சலா கிறிஸ்லின்ஸ்கியும் ஒருவர்.

கடல்கன்னி மாதிரி
அவர் இப்போது வெளியிட்டுள்ள கிளாமர் ஸ்டில்கள் வைரலாகி வருகின்றன. இதற்கு ரசிகர்கள் ஜாலியாக கமென்ட் அடித்துள்ளனர். சில ரசிகர்களுக்கு பதில் அளித்திருக்கிறார் ஏஞ்சலா. சில நெட்டிசன்ஸ், இது கோவா பீச் தானே? என்று கேட்டுள்ளனர். கருப்பு கடல்கன்னி மாதிரி இருக்கீங்க என்று சிலர் தெரிவித்துள்ளார்.

ஹேர்ஸ்டைல்
'கண்ணைத் திருப்பவே முடியலைன்னா பாருங்களேன், அவ்வளவு அழகு நீங்க என்று ஒருவர் கூறியிருக்கிறார். ஒரு ரசிகை, உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப அழகா இருக்கு, எனக்கும் கொஞ்சம் சீக்ரெட் சொல்லுங்களேன் என்று கேட்டிருக்கிறார். இன்னும் சிலர், வழக்கம் போல சூப்பர், செம, ஹாட், அட்டகாசம், அருமை, உங்க மேல பைத்தியமா இருக்கேன் என வர்ணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











