உடம்பு முழுக்க தேனீக்களைவிட்டு.. உலக தேனீக்கள் தினத்தில் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை!

சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு உடம்பு முழுக்க தேனீக்களை விட்டு நடத்தியுள்ள போட்டோ ஷூட் இணையத்தை திணறடித்து வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. 45 வயதான ஏஞ்சலினா ஜோலி ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட முக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார் ஏஞ்சலினா ஜோலி.

புகழை குவித்த படங்கள்

புகழை குவித்த படங்கள்

அவரது நடிப்பில் வெளியான ஹேக்கர்ஸ், ஜார்ஜ் வேலஸ், ஜியா, லாரா கிராஃட்: தாம்ப ரேடியர், தி டூரிஸ்ட், எ மைட்டி ஹார்ட், சேலஞ்சிங், மேல்ஃபிசியன்ட் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு பெயரையும் புகழையும் குவித்து தந்தன.

மிரள வைக்கும் போட்டோஷூட்

மிரள வைக்கும் போட்டோஷூட்

தொடர்ந்து சினிமாவில் ஆக்ட்டிவாக உள்ள ஏஞ்சலினா ஜோலி சமூக நலன் சார்ந்த விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு மிரள வைக்கும் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார் ஏஞ்சலினா.

பத்திக்கை அட்டைப் படத்துக்கு

அதாவது தேனீக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக 100க்கும் மேற்பட்ட தேனிக்களை உடலில் மொய்க்க விட்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகை இதழுக்காக இந்த போட்டோ ஷூட்டை அவர் நடத்தியுள்ளார்.

உடல் முழுக்க தேனீக்கள்

உடல் முழுக்க தேனீக்கள்

இந்த போட்டோவில் ஏஞ்சலினா ஜோலியின் மார்பு, தோள்பட்டை, கைகள், முகம் என முழுக்க தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த போட்டோ ஷூட்டின் போது செட்டில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தைரியத்துக்கு பாராட்டு

தைரியத்துக்கு பாராட்டு

ஏஞ்சலினா ஜோலியின் இந்த தேனீக்கள் போட்டோ ஷூட் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. ஏஞ்சலினா ஜோலியின் இந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் அவரது தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X