twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னொரு ஜார்ஜை இழக்க விரும்பவில்லை.. கருப்பின மனிதருக்காக காக்கும் கடவுளாக மாறிய டென்சல் வாசிங்டன்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த திங்களன்று ஜார்ஜ் ஃப்ளாய்டு எனும் கருப்பின மனிதரை வெள்ளை போலீஸ் அதிகாரி ஒருவர், தனது காலால் முட்டிப்போட்டு கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நாடு முழுவதும் போராட்டத்தை கிளப்பி இருக்கிறது.

    இந்நிலையில், போலீசாரிடம் சிக்கிய கருப்பின இளைஞர் ஒருவரை இருமுறை ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகர் டென்சல் வாசிங்டன் காப்பாற்றிய வீடியோ வைரலாகி அவருக்கு போராட்டக்காரர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிகிறது.

    மனிதாபிமானத்தோடு செயல்பட்டுள்ளார் டென்சல் வாசிங்டன் என்றும், கருப்பின மக்களின் ரியல் ஹீரோ என்றும் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    மல்லாக்கா படுத்துக்கொண்டு.. போட்டோவுக்கு போஸ்...ஸ்ரேயாவின் அலப்பறை!மல்லாக்கா படுத்துக்கொண்டு.. போட்டோவுக்கு போஸ்...ஸ்ரேயாவின் அலப்பறை!

    நெஞ்சை உலுக்கிய வீடியோ

    நெஞ்சை உலுக்கிய வீடியோ

    மே 25ம் தேதி மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்டு எனும் 46வயது மதிக்கத்தக்க நபரை 3 காவலர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, ஒரு வெள்ளை நிற போலீஸ் அதிகாரி தனது முட்டிக் காலை வைத்து சுமார் 7 நிமிடங்கள், மூச்சு விட முடியவில்லை என ஜார்ஜ் துடிக்க துடிக்க அவரை கொலை செய்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலானது.

    சம்மதிக்கவில்லை

    சம்மதிக்கவில்லை

    போலீசார் கைது செய்வதை அனுமதிக்காமல் தப்பிக்க ஜார்ஜ் முயற்சி செய்ததாக போலீசார் சொன்ன பொய் அறிக்கை வைரலான வீடியோ மூலம் அம்பலமாக, அந்த 4 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அது மட்டும் போதாது என்றும், ஜார்ஜுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது.

    உதவிய ஆஸ்கர் நாயகன்

    இந்நிலையில், போலீஸ்காரர்களின் பிடியில் சிக்கிக் கொண்ட ஒரு கருப்பின நபரை பார்த்த அமெரிக்கன் கேங்ஸ்டர் நடிகர் டென்சல் வாசிங்டன், தனது காரில் இருந்து இறங்கி, போலீஸ் அதிகாரிகளிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி, அங்கே எந்தவொரு துயர சம்பவமும் நடக்காமல் இறுதி வரை அந்த நபர் கைதாகும் வரை பார்த்துக் கொண்டும், அவனுக்கு மாஸ்க் கொடுத்தும் உதவிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    காக்கும் கடவுள்

    கருப்பினர்களை காக்க கடவுள்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என பல ஹாலிவுட் ரசிகர்கள் இந்த சம்பவத்தை பார்த்து, நடிகர் டென்சல் வாசிங்டனை ஏஞ்சல் என்றும், கருணை உள்ளம் கொண்டவர் என்றும் புகழ்ந்து வருகின்றனர். இன்னொரு ஜார்ஜ் வெள்ளை நிற வெறியர்களால் மரணிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூக்குரலிட்டு வருகின்றனர்.

    English summary
    Denzel Washington branded a ‘hero’ as footage of actor intervening between police and homeless man goes viral amid George Floyd protests
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X