’அங்கீகாரம்’ பெரிய வெற்றி இல்லை மீடியம் தான்.. ஹீரோவான தயாரிப்பாளர் கேஜெஆர் ஓபன் டாக்!

சென்னை: பா. ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கத்தில் KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜெ. ராஜேஷ் ஹீரோவாக நடித்த 'அங்கீகாரம்' திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவான 'பெத்தி' திரைப்படம் சொல்ல வந்த விஷயத்தை எந்தவொரு டிவீயேஷனும் இல்லாமல் ஒரே சீரான நேர்கோட்டில் காதல், காமெடி, மசாலா என எதுவும் இல்லாமல் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் நடைபெறும் கேவலமான அரசியலை தோலுரித்துக் காட்டியது.

Angikaaram not a blockbuster Movie It s a Medium One Only - Hero KJR Bold Speech

இந்நிலையில், அந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படத்தின் இயக்குநர் தென்பாதியான் மற்றும் ஹீரோ கேஜெஆர் மனம் திறந்து உண்மைகளை பேசியிருப்பது படக்குழுவை மட்டுமின்றி ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் பேசியவை குறித்து இங்கே பார்ப்போம் வாங்க..

அங்கீகாரம் இயக்குநர் பேச்சு: "இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தக் கதையை முதலில் கேஜிஆர் ஸ்டுடியோவிடம் கொண்டு சென்றேன். அப்போது வேறு ஒரு பெரிய ஹீரோவிடம் இந்தக் கதையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் வேறு ஒரு கதை செய்யச் சென்றுவிட்டேன். பிறகு, இந்தக் கதையை நம்மைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று தோன்றியதால், மீண்டும் இந்தக் கதையை கையில் எடுத்தேன். அப்போது கேஜிஆர், 'இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்' என்று கூறினார். அதன்பிறகு அவரை வைத்து இந்தப் படத்தை மீண்டும் தொடங்கினோம். இந்தக் கதைக்காக அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம். அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் கொடுத்த விமர்சனங்களிலும் அது பிரதிபலித்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தார்கள். ஜிப்ரான் சார் அற்புதமான இசையைக் கொடுத்தார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, 'இந்த ஹீரோவுக்கா?' என்று முதலில் கேட்டார். ஆனால் கதையை முழுமையாகக் கேட்ட பிறகு மிகவும் பிடித்துப்போய், இந்தப் படத்தில் இணைந்தார். அவர் இணைந்த பிறகு, இந்தப் படம் இன்னும் பெரிய உயரத்தை அடைந்தது. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நாங்கள் நினைத்தது அனைத்தும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. இந்தப் படம் அடுத்த வாரங்களிலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவு வேண்டும். நன்றி." என இயக்குநர் தென்பாதியான் பேசினார்.

Angikaaram not a blockbuster Movie It s a Medium One Only - Hero KJR Bold Speech

பெரிய வெற்றி இல்லை மீடியம் தான்: "முதலில், மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யூடியூப் சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் என அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது.

இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை மீடியம் தான். எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதை எடுத்திருக்கலாம் வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள். ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என் இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை அதனால் இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் நான் இந்த தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பேன். கைவிட மாட்டேன். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் உட்பட அனைவருக்கும் நன்றி உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி". என படத்தின் நாயகன் கேஜெஆர் பேசினார்.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X