அநியாயமா கொன்னுட்டாங்க.. சல்மான் கான், கரண் ஜோஹர் உருவ பொம்மைகள் எரிப்பு.. கொந்தளித்த ரசிகர்கள்!
பாட்னா: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கோபத் தீயை மூட்டி இருக்கிறது.
Recommended Video
சமூக வலைதளத்தில் கடந்த இரு நாட்களாக பாலிவுட்டில் பரவி வரும் நெபோடிஸம் தான் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என்ற சர்ச்சை வெடித்துள்ளது.
இந்நிலையில், பாட்னாவில் தற்போது சல்மான் கான் மற்றும் கரண் ஜோஹரின் உருவ பொம்மைகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

தற்கொலை தான்
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். பிரபல பாலிவுட் நடிகரான அவரது மரணத்தில், தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறிய நிலையில், பிரேத பரிசோதனையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி இருக்கிறது.

காதல் தோல்வி
சுஷாந்த் சிங் காதல் தோல்வி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், சில நாட்களுக்கு முன்னதாக அவரது மேனேஜர் திஷா சலியான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததையும் கோர்த்து பாலிவுட்டில் பல கோணங்களில் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கான காரணம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதெல்லாம் இல்லை
ஆனால், காதல் தோல்வி பிரச்சனையோ, அவரது முன்னாள் மேனேஜரோ சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் இல்லை என்றும், பாலிவுட்டில் நிலவும் நெபோடிஸம் பிரச்சனை தான் அவரை கொன்று விட்டதாகவும், அதற்கு முக்கிய காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலிவுட்டில் கரண் ஜோஹர் மற்றும் சல்மான் கான் சுஷாந்த் சிங்கை பிளாக் லிஸ்ட் செய்ததே காரணம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

வழக்கு பதிவு
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு கரண் ஜோஹர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக 306, 109, 504, 506 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா முசாபர் நகர நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளார்.

உருவ பொம்மைகள் எரிப்பு
சமூக வலைதளத்தில் கொந்தளித்து வந்த பாலிவுட் ரசிகர்கள், இன்று மேலும் ஒரு படி மேலே சென்று, பாட்னாவில் சல்மான் கான் மற்றும் கரண் ஜோஹரின் உருவ பொம்மைகளையும் எரித்துள்ளனர். இவர்கள் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு புதிய பட வாய்ப்புகளை வர விடாமல் தடுத்து, அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி கொன்று விட்டனர் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சோனம் கபூர்
ஆலியா பட், சோனம் கபூர், அனன்யா பாண்டே, சோனாக்ஷி சின்ஹா, சாரா அலி கான் என பல பாலிவுட் நடிகைகள் வாரிசு நடிகைகளாக வந்து இருப்பதையும் ரசிகர்கள் கண்டித்து ட்ரோல் செய்து வருகின்றனர். இவர்களின் இம்சையை தாங்க முடியாத நடிகை சோனம் கபூர், தனது சமூக வலைதள கமெண்ட் ஆப்ஷன்களை தற்காலிகமாக முடக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











