கார் கண்ணாடியை உடைத்த நடிகர்: அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
Recommended Video
பெங்களூர்: மதிகேரேவில் கார் கண்ணாடியை உடைத்த நடிகர் ஹுச்சா வெங்கட்டை பொதுமக்கள் சேர்ந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், கன்னட நடிகருமான ஹுச்சா(மென்ட்டல்) வெங்கட் கர்நாடக மாநிலம் மதிகேரேவுக்கு சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த வெங்கட் சாலையில் சென்றவர்களை திட்டியடதுடன், வாகனங்கள் மீது கற்களை வீசினார்.

அப்பொழுது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துவிட்டு வந்த திலீப் என்பவரை வெங்கட் அடித்தார். மேலும் கே.எஸ்.ஆர்.டி.சி டிப்போ முன்பு நின்று கொண்டிருந்த திலீப்பின் கார் வின்ட்ஷீல்டை அவர் உடைத்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஹுச்சா வெங்கட்டை அடித்து நொறுக்கினார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து வெங்கட்டை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து கார் உரிமையாளர் திலீப் கூறியதாவது,
என்னை ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறாய், உனக்கு நான் யார் என்று தெரியுமா என வெங்கட் என்னிடம் கேட்டார். நீங்கள் வெங்கட் தானே என்று கேட்டேன். உடனே அவர் என்னை அறைந்ததுடன், காரணமே இல்லாமல் என் கார் கண்ணாடிகளை உடைத்தார் என்றார்.
முன்னதாக வெங்கட் கடந்த வாரம் சென்னைக்கு சென்றபோது ஹோட்டல் ஒன்று அவருக்கு அறை ஒதுக்க மறுத்தவுடன் காலணியில்லாமல் சாலைகளில் நடந்ததாக செய்திகள் வெளியாகின.
நடிகரும், இயக்குநருமான ஹுச்சா வெங்கட் கன்னட பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் பிரபலமானார். அவர் சக போட்டியாளரான ரவியை தாக்கியதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்த சீசனில் விருந்தாளியாக வந்த வெங்கட் போட்டியாளர் ஒருவரை தாக்கினார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வெங்கட். தனக்கும், நடிகை குத்து ரம்யாவுக்கும் திருமணமாகிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பொய் சொல்வதாகக் கூறி வெங்கட் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ரம்யா. மேலும் செய்தி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தின்போது இயக்குநர் ஒருவரை தாக்கினார் வெங்கட்.
வெங்கட் இயக்கிய படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அவர் காரணம் இல்லாமல் கோபப்படுவது வழக்கமாகிவிட்டது. ஹுச்சா வெங்கட்டின் இயற்பெயர் வெங்கட்ராம் லக்ஷ்மண் ஆகும்.


Click it and Unblock the Notifications