படுமோசமாக தாக்கிய முன்னாள் காதலன்.. போட்டோவை பகிர்ந்து கண்கலங்கிய பிரபல நடிகை!

சென்னை : பிரபல நடிகை அனிகா விக்ரமன் தனது காதலனால் படுமோசமாக தாக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

தமிழ் நடிகையான அனிகா விக்ரமன் 'க்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

அதன் பின் விஷமக்காரன், எங்க பாட்டன் பாத்தியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அனிகா விக்ரமன்

நடிகை அனிகா விக்ரமன்

இந்நிலையில், அனிகா விக்ரமன், உடல் முழுவதும் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தனது காதலன் தாக்கிவிட்டதாக அதிர்ச்சியான ததவலை கூறியுள்ளார். அதில், காதலன் அனூப்புடனான உறவு குறித்து மனம் திறந்து எழுதி உள்ளார். நான் அனூப் பிள்ளை என்ற நபரைக் காதலித்து வந்தேன். அவர் என்னை மனதளவிலும், உடலளவிலும் கடந்த சில வருடங்களாக துன்புறுத்தி வருகிறார். இப்படிப்பட்ட ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை. அவர் என்னை இப்படி செய்வார் என்று என் கனவிலும் நினைத்தது இல்லை.

காலில் விழுந்து அழுதார்

காலில் விழுந்து அழுதார்

ஒரு முறை சென்னையில் என்னை பயங்கரமாக தாக்கினார், பின் காலில் விழுந்து அழுதார். நான் இனி இப்படி செய்ய மாட்டேன் என்று அழுததால், அவரை மன்னித்தேன். ஆனால், பெங்களூருவில் மீண்டும் என்னை கடுமையாக தாக்கினார். இதனால், நான் அவர் மீது போலீசில் புகார் அளித்தேன். ஆனால், பணம் கொடுத்து வெளியில் வந்து மீண்டும் மீண்டும் என்னை சித்ரவதை செய்தார்.

தினமும் கொடுமைப்படுத்தினார்

தினமும் கொடுமைப்படுத்தினார்

கடந்த சில வருடங்களாக நான் பலமுறை அனூப் பிள்ளையால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறேன். அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால், அவர் என்னை விட்டுப் பிரியத் தயாராக இல்லை. என் போனை உடைத்தார். படப்பிடிப்புக்கு போகவிடாமல் பல இடையூறுகளை செய்தார். லேப்டாப்பில் என் வாட்ஸ்அப் மெசேஜ் எல்லாம் எனக்கு தெரியாமல் பார்த்து என்னை தினமும் அடித்து கொடுமைப்படுத்தினார்.

மிரட்டுகிறார்

மிரட்டுகிறார்

தற்போது அனூப் நியூயார்க்கில் தலைமறைவாக இருக்கிறார். எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். நான் அனுபவித்த துன்பத்திற்கு நிச்சயம் நியாயம் வேண்டும். தற்போது காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என் நடிகை அனிகா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X