வாவ்.. ஜெ.வாக அஜித் ரீல் மகள்.. சர்ச்சைகளுக்கு இடையே சத்தமில்லாமல் தரமான சம்பவம் செஞ்சிட்டாரே!

குயின் படத்தில் ஜெயலலிதாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனிகா.

Recommended Video

Queen | Official Trailer | Ramya Krishnan | Gautam Vasudev Menon

சென்னை: குயின் படத்தில் ஜெயலலிதாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை குயின் என்ற பெயரில் வெப் சீரிஸாக எடுத்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். எம்ஜிஆராக மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் நடித்திருக்கிறார்.

குயின் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதன் டிரெய்லர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

சிறுவயது கதாபாத்திரம்

சிறுவயது கதாபாத்திரம்

ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதேபோல் சிறுவயது ஜெயலலிதாவாக நடித்துள்ள அனிகாவையும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். பள்ளி பருவத்தில் ஜெயலலிதா படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்ததை, மிக அழகாக பிரதிபலித்திருக்கிறார் அனிகா.

ரீல் மகள்

ரீல் மகள்

என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா. இரண்டு படங்களிலுமே அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவரை தல ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகளாகவே கொண்டாடி வருகின்றனர். வலிமை படத்திலும் அஜித்துடன் அனிகா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

சர்ச்சை

சர்ச்சை

சமீபகாலமாக தான் பேபியல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சேலையில் மற்றும் சில மாடர்ன் உடைகளில் கவர்ச்சிப் புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் அனிகா. அதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் குயின் வெப் சீரிஸ்ல் சத்தமில்லாமல் அனிகா நடித்து முடித்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இயக்கம்

இயக்கம்

குயின் வெப்சீரிஸ் வரும் 14ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த வெப் சீரிஸில் ‘கிடாரி' திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X