Anika - ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்.. யார் ஹீரோ தெரியுமா?.. செம மேட்டர் உள்ளே
சென்னை: Anika (அனிகா) என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களீல் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கிறார்.
கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா. அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக க்ளைமேக்ஸில் அவருக்கும், அஜித்துக்குமான காட்சி பலரையும் கலங்க வைத்தது.

ஹீரோயின் அனிகா: இந்தச் சூழலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து மலையாளத்திலும் ஹீரோயினாக களமிறங்கிய அவர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்தார். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அனிகா ஓவர் கவர்ச்சி காட்டியிருக்கிறார் என கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகளா இது என வாயை பிளந்தனர்.
சுமாரான வரவேற்பு: கவர்ச்சி காட்டினாலும் படத்தின் கதையில் பல சிக்கல்கள் இருந்ததன் காரணமாக ஓ மை டார்லிங் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனையடுத்து அவர் தற்போது மலையாளத்தில் மாலு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மலையாளத்தில் முதல் படம் சொதப்பியதால் நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் தனக்கான இடத்தை நிலைப்படுத்திட வேண்டுமென்ற கணக்கில் இருக்கிறார் அவர்.
தமிழில் அனிகா: தெலுங்கு, மலையாளத்தில் ஹீரோயினாக வலம் வந்தாலும் தமிழிலும் எப்படியாவது ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்ற ஆசையிலும் அவர் இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தமிழில் பிடி சார் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. மேலும் தனுஷின் 50ஆவது படத்திலும் அவர் முக்கியமான ரோலில் நடித்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஹீரோயின்: இந்நிலையில் தமிழில் ஹீரோயினாக வேண்டும் என்ற அனிகாவின் தற்போது நிறைவேறவிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தனது 50ஆவது படத்தை முடித்து தனுஷ் இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அதில் தனது அக்கா மகனை ஹீரோவாக களமிறக்குகிறார் என்றும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் ஓடிக்கொண்டிருந்தன. அந்தப் படத்தில்தான் அனிகா ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என்று இப்போது கூறப்படுகிறது.
இதுகுறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அனிகாவின் ஆசை நிறைவேறும் தருவாயில் இருப்பதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார். ஆல் தி பெஸ்ட் அனிகா..


Click it and Unblock the Notifications











