தல 60: அப்பா மகள் சென்டிமெண்ட்... அஜீத் குமாருக்கு செல்ல மகள் அனிகா தான்

Recommended Video

ரகசியமாக தொடங்கிய அஜித்தின் 60 படப்பிடிப்பு-வீடியோ

சென்னை: அஜீத் குமார் தற்போது நடித்து வரும் தல 60 படமும் வழக்கம் போலவே அப்பா மகள் சென்டிமெண்ட் படமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்திலும் விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகாவே இதிலும் நடிக்கப்போகிறார். அஜித் - அனிகாவின் நடிப்பு என்பது நடிப்பு போல் இல்லாமல் நிஜம் போல் இருப்பது தான் அந்த கதாபாத்திரங்களுக்கு கிடைத்த வெற்றி. அது இப்படத்திலும் நீடித்து நம் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்ப்போம்.

இந்த ஆண்டு தொடக்கமே நம்ம தல அஜித்குமாருக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் அப்பா மகள் சென்டிமென்டில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Anikha once again act with Ajithkumar in Thala 60 Film

அதே போல் கடந்த ஆகஸ்ட் மாதம் அஜித்குமார் ஒரு மாற்றுப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை திரைப்படமும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்து வருகிறது. அவரின் சிறப்பான நடிப்பால் இந்த இரு திரைப்படங்களும் நல்ல வரவவேற்பை பெற்றுள்ளது.

தொடர் வெற்றியை அடுத்து அஜித் குமார் நடிக்கும் படம் தல 60. இப்படத்தில் மீண்டும் அஜித், எச்வினோத் ஜோடி இணைகிறது. இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இவர்களின் வெற்றி கூட்டணி இப்படத்திலும் தொடர்வதால் ரசிகர்களிடம் ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Anikha once again act with Ajithkumar in Thala 60 Film

மேலும், என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் அஜித் குமாரின் மகளாக நடித்த அனிகா இப்படத்திலும் அவருடன் நடிக்கவுள்ளார். அஜித், அனிகாவின் அப்பா-மகள் சென்டிமென்ட மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

அனிகா ஒரு பேட்டியின் போது, அஜித் அனிகாவை மோளே என்று அழைப்பது அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இப்போது அனிகா, தான் அஜித்துடன் மீண்டும் நடிக்கப்போகும் தகவலை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே போல், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் நச்சென்று ஆழப் பதிந்து விட்டது. அதிலும் குறிப்பாக பெண்களின் மனதில் அவருடைய குட்வில்(Goodwill) ஏகத்துக்கும் உயர்ந்து விட்டது. பெண்களுக்கு பிடித்தது மாதிரியே, அவருடைய செல்ல மகளான அனோஷ்காவிற்கும் அவருடைய நடிப்பு ரொம்ப பிடித்துப்போய் விட்டது.

Anikha once again act with Ajithkumar in Thala 60 Film

இதனையடுத்து, அனோஷ்கா அஜீத்திடம் செல்லமாக கண்டிஷன் போட்டுவிட்டார். இனிமேல் அஜீத் நடிக்கும் படங்களில் பெண்களை கிண்டல் செய்யும் விதமாக நடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். அஜீத்தும் அவருடைய மகள் போட்ட கண்டிஷன் படியே, இனிமேல் நடிக்கும் அனைத்து படங்களிலும் பெண்களை கிண்டல் செய்யும் விதமாக நடிக்க மாட்டாராம்.

குடும்பப் பாங்கான பாசம் கலந்த சென்டிமெண்ட் படங்களில் நடிப்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எடுக்கப்பட்டு வரும் தல 60 படமும் வழக்கம் போலவே குடும்பம், அப்பா மகள் சென்டிமெண்ட் படமாகவே இருக்கும் என்று தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போலவே, விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகாவும் இந்தப் படத்தில் அஜீத்துக்கு மகளாகவே நடிக்கப்போகிறார்.

அஜித் - அனிகாவின் நடிப்பு என்பது நடிப்பு போல் இல்லாமல் நிஜம் போல் இருப்பது தான் அந்த கதாபாத்திரங்களுக்கு கிடைத்த வெற்றி. அது இப்படத்திலும் நீடித்து நம் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X