Anikha Surendran: இளநீரை ஏன்மா அங்க மோத விடுற.. மாலத்தீவில் குட்டி நயன்தாரா.. பறக்கும் கமெண்ட்ஸ்!
சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இளநீர் போட்டோக்களுக்கு ஏடாகூடமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவுடன் ஏகப்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
நயன்தாரா சாயலில் இவர் இருப்பதாகக் கூறி குட்டி நயன்தாரா என்றே ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வருகின்றனர்.

அஜித்தின் ரீல் மகள்: மோகன்லால், மம்மூட்டி என ஏகப்பட்ட மலையாள நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
அந்த படத்தில் இடம்பெற்ற "உனக்கென வேணும் சொல்லு" பாடல் வேறலெவலில் ஹிட் அடித்தது. அந்த படத்தைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக அனிகா சுரேந்திரன் நடித்திருந்தார்.
குட்டி நயன்தாரா: நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்த அனிகா சுரேந்திரன், பாஸ்கர் தி ராஸ்கல் மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் லேடி சூப்பர்ஸ்டாருக்கு மகளாக நடித்திருந்தார்.
மலையாள நடிகையான அனிகா சுரேந்திரன் அச்சு அசல் அங்கிருந்து வந்த நயன்தாரா போலவே இருக்கிறார் என ரசிகர்கள் அவரை குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர்.

மாலத்தீவில் அனிகா அட்டகாசம்: இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா படத்தின் மூலம் ஹீரோயினாக மாறிய அனிகா சுரேந்திரன், மலையாளத்தில் ஓ மை டார்லிங் மற்றும் லவ்ஃபுலி யுவர்ஸ் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ஆதியுடன் பிடி சார் படத்திலும், நீயா நானா கோபிநாத் உடன் வாசுவின் கர்ப்பிணிகள் படத்திலும் நடித்து வருகிறார். வாசுவின் கர்ப்பிணிகள் பட இயக்குநர் காலமானதால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதால் ரெஸ்ட் எடுப்பதற்காக மாலத்தீவுக்கு தனது நண்பர்களுடன் சென்று அட்டகாசம் செய்து வருகிறார் அனிகா சுரேந்திரன்.

இளநீருடன் போஸ்: மாலத்தீவில் குட்டி ஷார்ட்ஸ் உடையை அணிந்து கொண்டு நண்பர்களுடன் கடலில் விளையாடும் போட்டோக்களை ஷேர் செய்திருந்த அனிகா சுரேந்திரன் தற்போது இளநீரை கையிலும், நெஞ்சில் சாய்த்தபடியும் வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.
அதை பார்த்த நெட்டிசன்கள், இளநீரை ஏன்மா அங்க மோத விடுற என்றும் மேலும், டபுள் மீனிங் உடன் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











