போற போக்கை பார்த்தா நயன் தாராவை ஓவர்டேக் பண்ணிடுவாரு போல.. குதிரையுடன் குட்டி நயன்தாரா!
சென்னை: தல அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் மகளாக நடித்து அசத்திய அனிகா சுரேந்திரனின் இளமைப் பருவ போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
சீக்கிரமே ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள அனிகா சுரேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை வலுப்படுத்தி வருகிறார்.
ஒரு மில்லியன் ரசிகர்களை வெகு விரைவாக சேர்த்த அவர் தற்போது குதிரையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அஜித்தின் ரீல் மகள்
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன், தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானர். நானும் ரவுடி தான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர், கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து பட்டையை கிளப்பினார்.

சவாலான குறும்படம்
லக்ஷ்மி எனும் குறும்படத்தை இயக்கி சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் சர்ஜுன், இயக்கத்தில் அடுத்ததாக வெளியான ‘மா' குறும்படத்தில் இளம் வயதில் கருத்தரிக்கும் சவாலான ரோலில் செம போல்டாக நடித்து பாராட்டுக்களை அள்ளி இருந்தார். குயின் வெப்சீரிஸிலும் தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு மில்லியன் ரசிகர்கள்
இனிமேலும் தான் குழந்தை நட்சத்திரம் இல்லை; சீக்கிரமே ஹீரோயினாக போகிறேன் என்பதை அறிவிக்கும் தளமாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார் அனிகா. இவர் கவர்ச்சிகரமாக எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வைரலாக்கி வந்த நிலையில், தற்போது ஒரு மில்லியன் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர். மாளவிகா மோகனனுக்கே 1.7 மில்லியன் தான்.

நயன்தாரா சாயல்
பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள அனிகா சுரேந்திரனை, குட்டி நயன் என்றே பலரும் செல்லமாக அழைக்கத் தொடங்கி விட்டனர். அவரும் நயன்தாரா சாயல் தெரியும் படி தன்னை மேக்கப் செய்து எடுத்த போட்டோஷூட்களும் வைரலாகின.

குதிரையுடன் குட்டி நயன்தாரா
இந்நிலையில், தற்போது குதிரையுடன் கெளபாய் கெட்டப்பில் பூட்ஸ், தொப்பி எல்லாம் அணிந்து கொண்டு, மலை அருகே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனிகா. அதனை பார்த்த ரசிகர்கள், குதிரையுடன் குட்டி நயன்தாரா இருக்கிறார் என்று கமெண்ட் செய்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

போற போக்கை பார்த்தா
மேலும், அனிகா சுரேந்திரனின் தீவிர ரசிகர்கள், இந்த வயசுலயே இவர் ஜெட் வேகத்தில் செம ஸ்பீடாக செல்கிறாரே? போற போக்கை பார்த்தால் நயன்தாராவையே ஓவர் டேக் செய்து விடுவாரோ வெகு விரைவில் என்றும் எக்கச்சக்கமாக பில்டப்புகளை குவித்து வருகின்றனர். ஓவர் நைட்டில் ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகளும் குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











