காதலில் விழுந்த அஜித்தின் ரீல் மகள்.. ‘புட்ட பொம்மா‘ படத்தின் கலக்கலான டிரைலர்!
சென்னை : நடிகர் அஜித்தின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கும் புட்ட பொம்மா படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கேரள பைங்கிளியான அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தமிழில் இவர் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில், த்ரிஷா - அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

அனிகா சுரேந்திரன்
அதேபோல விஸ்வாசம் படத்திலும், அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்து தமிழ் ஆடியன்சின் மனதை வென்றார். இந்த படத்தில் தந்தை மகள் பாசம் அதிகம் ரசிகர்களை கவர்ந்ததால் இவரை அஜித்தின் ரீல் மகள் என்கிற அடையாள மொழியுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் அனிகா.

இணையத்தில் படுஆக்டிவ்
18 வயதான அனிகா சுரேந்திரன் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா, தற்போது, தெலுங்கு திரைப்படமான புட்ட பொம்மா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

காதலிக்கும் அனிகா சுரேந்திரன்
அந்த டிரைலரில் அனிகா சுரேந்திரனுக்கு காதல் கிறுக்கு தலைக்கு ஏறி, ஒரு இளைஞனை காதலித்து வருகிறார். இத்தனை நாள் குட்டி பெண்ணாக நாம் பார்த்து வந்த அனிகா, புட்ட பொம்மா படத்தில், வட்டசாட்டமாக வளர்ந்து காதலிக்கவே தொடங்கி விட்டார். காதல், அரசியல், அடிதடி என வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இப்படத்தின் டிரைலர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படத்தில் மாஸ்டர், கைதி படங்களில் நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 4 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. குடியரசு தினமான 26ந் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில சிக்கல்கள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஷோரி சந்திரசேகர் ரமேஷ் இயக்கி உள்ளார். மேலும், சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் எஸ் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











