என்ன தேஜஸ் கூடிட்டே போகுது.. ஒயிட் கிராப் டாப்பில் அதிர வைக்கும் குட்டி நயன்.. அசந்து போன ஃபேன்ஸ்!

சென்னை: குட்டி நயன் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை அனிகா சுரேந்திரனின் அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பண்டிகை காலம் வந்து விட்டாலே பாப்பா வித விதமா போட்டோஷூட் போட்டுத் தள்ளுவார்.

இப்போ சிம்பிளா ஒயிட் கிராப் டாப் மற்றும் ஜீன் அணிந்து அனிகா போட்டுள்ள அட்டகாசமான போட்டோக்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

பேபிம்மா

பேபிம்மா

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, தமிழ் சினிமாவிலும் என்னை அறிந்தால் முதல் விஸ்வாசம் வரை ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன். பேபிம்மாவாக இருந்த அனிகா, இப்போ யங் கேர்ளாக இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறார்.

நயன்தாரா சாயல்

நயன்தாரா சாயல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் குட்டி காதம்பரியாக நடித்து கலக்கி இருப்பார். மேலும், மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படம் மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நயன்தாராவுக்கு மகளாக நடித்த அனிகாவிடம் அப்படியே நயன்தாரா சாயல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் இளவரசி

இன்ஸ்டாகிராம் இளவரசி

குயின் படத்தில் குட்டி ஜெயலலிதா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அனிகா சுரேந்திரன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஏகப்பட்ட போட்டோஷூட்கள் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, இன்ஸ்டாகிராமின் இளவரசியாகவே மாறி வருகிறார். 1.1 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்வது மிகப்பெரிய சாதனை.

ஒயிட் கிராப் டாப்பில்

ஒயிட் கிராப் டாப்பில்

இந்நிலையில், தற்போது ஒயிட் கிராப் டாப் மற்றும் நீல நிற ஜீன் அணிந்து இடுப்பு தெரிய அவர் செம கேஷுவலாக எடுத்த போட்டோஷூட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒயிட் டாப்பில் அப்படியே நயன்தாராவை பார்ப்பது போலவே இருக்கிறது என்றும், ரொம்ப அழகா இருக்கீங்க அனிகா என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இன்னொரு பெண்ணும்

இன்னொரு பெண்ணும்

அனிகா சுரேந்திரன் தனது தோழி தேவிகா சஞ்சய் உடன் கேஷுவலாக எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்து வருகிறார். அனிகா பதிவிட்ட இந்த போட்டோக்களுக்கு குறுகிய நேரத்தில் லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

தீபாவளி ஸ்பெஷல்

தீபாவளி ஸ்பெஷல்

மேலும், அனிகா சுரேந்திரனிடம் தீபாவளி பண்டிகை வேற நெருங்குதே ஸ்பெஷல் போட்டோஷூட் ஏதும் இல்லையா? என்ற கேள்வியையும் அவரது தீவிர ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பொதுவாக பண்டிகை காலங்கள் வந்து விட்டாலே குட்டி நயனை கையில் பிடிக்க முடியாது அந்த அளவுக்கு போட்டோவாக போட்டுத் தள்ளுவார். சீக்கிரமே தீபாவளி ஸ்பெஷல் வரும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X