கலக்குறாங்களே.. குட்டி நயன்தாராவுக்கு ஓணம் வந்துடுச்சு போல.. ஒரே புடவை போட்டோஷூட்டா இருக்கு!
சென்னை: அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன், இப்போ வளர்ந்து குமரியா ஆகிட்டாங்க.. அவங்களோட ஓணம் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Recommended Video
சமீபத்தில் வாழை இலையை அணிந்து கொண்டு இவர் கொடுத்த கவர்ச்சி போட்டோஷூட் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு மகளாக
2010ம் ஆண்டு வெளியான கதா துடருனு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா சுரேந்திரன். அதற்கு முன்னதாகவே சோட்டா மும்பை படத்தில் நடித்துள்ளார். தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடிகை திரிஷாவுக்கு மகளாக நடித்த அனிகா, விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்து அசத்தி இருந்தார்.

குட்டி நயன்தாரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தில் இளம் வயது நயன்தாராவாக அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் நயனுக்கு மகளாக நடித்து கலக்கி வரும் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன் என்றே அழைத்து வருகின்றனர்.

குழந்தை இப்போ குமரி ஆயாச்சு
குழந்தை நட்சத்திரமாக மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பாராட்டுக்களை குவித்து வந்த அனிகா சுரேந்திரன், தற்போது குமரியாக மாறி விட்டார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கொண்டையில் வாழைப்பூ
பிரபல புகைப்படக் கலைஞர் மகாதேவன் தம்பி, இளம் நடிகை அனிகா சுரேந்திரனை வைத்து வாழை இலை, வாழைப்பூ என அவரை ஒரு வாழைத் தோட்டமாகவே மாற்றி எடுத்த கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள் தென்னிந்திய சினிமா பிரபலங்களையே வாயை பிளக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் கொண்டையில் வைக்கப்பட்ட வாழைப்பூ செம..

ஓணம் வந்தல்லோ
திருவோணம் பண்டிகை இன்னும் சில தினங்களில் வருவதை முன்னிட்டு, தற்போது கேரளா புடவையில் இளம் நடிகை அனிகா சுரேந்திரன் நடத்தி உள்ள வித விதமான போட்டோஷூட் புகைப்படங்கள், இளைஞர்களை அழகால் சுண்டி இழுக்கும் அளவுக்கு அசத்தலாக உள்ளது. லைக்குகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











