Just In
- 3 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 4 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 5 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 5 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹீரோயின் ஆனார் ’குட்டி நயன்தாரா..’ ரீமேக் ஆகும் மலையாள கப்பேலாவில் இவர்தான் நாயகி!
சென்னை: குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் பேபி அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயின் ஆகிறார்.
மலையாள சினிமாவில் இருந்து குழந்தை நட்சத்திரமாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிகா.
தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அஜித் மகளாக நடித்திருந்தார்.

அஜித்தின் மகளாக
இந்தப் படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. இதையடுத்து நானும் ரவுடிதான், மிருதன், அஜித்தின் விஸ்வாசம் உட்பல பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். விஸ்வாசம் படத்தில் தல அஜித் மகளாக நடித்திருந்தது, அனைவரின் பாரட்டையும் பெற்றிருந்தார்.

குட்டி நயன்தாரா
அந்தப் படத்தில் குழந்தையாக இருந்த அனிகா, தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக மாறியிருக்கும் அனிகாவை, குட்டி நயன்தாரா என்கிறது கோடம்பாக்கம். நயனின் சாயலும் அவரிடம் அப்படியே இருப்பதால், இந்த பெயர் அவருக்கு பொருத்தம்தான் என்கிறார்கள்.

வாய்ப்புகள் வரும்
சோசியல் மீடியாவில் அடிக்கடி போட்டோஷூட் ஸ்டில்களை பதிவிட்டு வந்த அனிகாவுக்கு வாய்ப்புகள் தேடி வரும் என்று கணித்தார்கள். அதற்காகவே அவரும் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அனிகா, ஹீரோயினாக நடிக்க ரெடியாகி கொண்டிருந்தார். இப்போது ஹீரோயினாக மாறிவிட்டார்.

முகமது முஸ்தபா
தெலுங்கு படம் ஒன்றில் அவர் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி கவனிக்கப்பட்ட படம், கப்பேலா. அன்னாபென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மாத்யூ உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை முகமது முஸ்தபா இயக்கி இருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

ஜெஸ்ஸி வேடத்தில்
இப்போது, இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் இயக்கிய முகமது முஸ்தபா தெலுங்கிலும் இயக்குகிறார். சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கிறார். ஸ்ரீநாத் பாசி வேடத்தில் விஷ்வக் சென் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜெஸ்ஸி வேடத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார் அன்னா பென். அவர் கேரக்டரில் அனிகா சுரேந்திரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.