என்னங்கடா இது.. குட்டி நயன்தாராவை அதுக்குள்ள கர்ப்பமாக்கிட்டீங்க.. வனிதா விஜயகுமாரையும் விடலயா?

சென்னை: நீயா நானா கோபியுடன் வரிசையாக பல பெண்கள் கர்ப்பிணிகளாக இருக்கும் புதிய படத்தின் போஸ்டர் ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.

மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் இயக்குநர் மணி நாகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'வாசுவின் கர்ப்பிணிகள்' எனும் புதிய திரைப்படம்.

அதில், வனிதா விஜயகுமார், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகைகள் கர்ப்பிணிகளாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

குட்டி நயன்தாரா கர்ப்பமா

குட்டி நயன்தாரா கர்ப்பமா

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் சினிமாவில் இளம் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய நிலையில், திடீரென நிறைமாத கர்ப்பிணி கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்கிற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. அதுவும் நீயா நானா கோபிக்கு ஜோடியாக நடித்துள்ளாரா என்கிற ஷாக் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அந்த குறும்படத்தில்

அந்த குறும்படத்தில்

ஏற்கனவே லக்‌ஷ்மி குறும்படத்தை இயக்கிய இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் மா எனும் குறும்படத்தில் அனிகா சுரேந்திரன் வயதுக்கு வந்த சிறுமி கர்ப்பமாகுவதும், அதை அறிந்து கொள்ளும் தாய் அந்த சிசுவை கலைத்து விட்டு மீண்டும் விளையாட அனுப்புவதுமாக செம போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான கதாபாத்திரத்தில் சினிமாவில் நடித்து வருகிறார் அனிகா சுரேந்திரன்.

வனிதா விஜயகுமாரும்

வனிதா விஜயகுமாரும்

டெலிவர் சூன் என கேப்ஷன் போட்டு இந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அவரும் கர்ப்பமாக போஸ்டரில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், இது என்னடா கொடுமை, இத்தனை பெண்கள் கர்ப்பமாக இருப்பது போல படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே ஒரு மார்க்கமாக இருக்கிறதே படத்தின் கதை எப்படி இருக்கும் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

நீயா நானா கோபியும் கர்ப்பமா

நீயா நானா கோபியும் கர்ப்பமா

வனிதா விஜயகுமார் மற்றும் அனிகா சுரேந்திரன் மேலும், இரண்டு நடிகைகள் கர்ப்பமாக இருப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு முன்னாள் வாசு கதாபாத்திரத்தில் நீயா நானா கோபி உடல் பருமனாக இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவரும் கர்ப்பமாக இருக்கிறாரா என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் மோசடி பேர்வழியை பற்றிய கதையா? அல்லது வேறு ஏதாவது புதுமையான விஷயம் இருக்கப் போகிறதா? நீயா நானா கோபி ஹீரோவாக நடிக்கிறாரா? என ஏகப்பட்ட ஆச்சர்ய கேள்விகளுடன் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் காட்சிகளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், போஸ்டரை பங்கமாக சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும், வேறு சில நடிகர்கள் முகங்களை மார்ப்பிங் செய்து கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X