நான் அணிலா? அஜித் சகோதரரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட நெட்டிசன்.. வெச்சு வெளுத்துட்டாப்ல!

சென்னை: தமிழ் சினிமாவில் அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை என்பது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், விஜய் ரசிகர்கள் சிலர் அடங்கிவிட்டனர், ஆனால் சிலர் வேண்டும் என்றே அஜித் ரசிகர்களை சீண்டி வருகிறார்கள். அதேபோல், அஜித் ரசிகர்களும் அமைதியாக இருக்காமல் விஜய் ரசிகர்களை வம்பு இழுத்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சில கட்சியினர் இணையத்தில் அஜித் - விஜய் குறித்து ஏதாவது விமர்சிக்க, அவை பேசு பொருளாக மாறி வருகிறது. இப்படி இருக்கையில் அஜித்தின் சகோதரர் அனீல் குமார் குறித்து நெட்டிசன் ஒருவர், அஜித் வீட்டில் ஒரு அணிலா என்று விமர்சிக்க, அதற்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார் அனீல் குமார்.

அஜித்தின் சகோதரர்களில் அனில்குமார் மீது நெட்டிசன்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கு இயபாகவே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. ஊடகங்களுக்கு அனில் குமார் பேட்டி கொடுக்கும் போது அஜித் குறித்து யாராவது கேள்வி கேட்டால் கூட, அஜித் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் , என்னைக் கேட்காதீர்கள், என்னிடத்தில் என்னைப் பற்றி மட்டும் கேளுங்கள் என்று கூறி அதிரடி காட்டியவர்.

இப்படி இருக்கையில் விஜய் ரசிகர்களை நெட்டிசன்கள் அணில் என்று விமர்சிக்கிறார்கள், சில விஜய் ரசிகர்கள் சிலருமே கூட, ஆமாம் நாங்கள் அணில் தான், அணில் என்ற வார்த்தையை எந்த இடத்தில் பயன்படுத்தினார்கள் என்று தெரியாமல் விமர்சிக்க வேண்டாம் என்று கூறி பதிலடி எல்லாம் கொடுத்துள்ளனர்.

Anil Kumar Slams Netizen Over Anil Troll Ajith Kumar Family Response Goes Viral

தரமான பதிலடி: இப்படி இருக்கையில் அஜித்தின் சகோதரர் பெயர் அனில் குமார் என்பதால், இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் அஜித் வீட்டிலேயே ஒரு அணிலா என்று கேள்வி எழுப்பினார். இந்த போஸ்ட் அஜித்தின் சகோதரர் அனில்குமார் கண்களில் பட, அவர் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

நான் அணிலா: அதாவது, " நான் அணில் குமார் இல்லை, அனில் குமார். கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிய வேண்டாம், நீங்கள் சண்டை செய்ய விரும்பிவிட்டால் துப்பாக்கிச் சண்டைக்கு கத்தியை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டாம். ஆனால் அப்படி கத்தியுடன் தான் செல்வீர்கள் என்றால் கடுமையாக நீங்கள் தாக்கப்படுவீர்கள் என்று கூறியுள்ளார். இவரது இந்தப் பதிவைப் பார்த்த சிலர், 'பார்த்து மோது பஞ்சர் ஆகிவிடுவாய் என்பதைத்தான் தனது ஸ்டைலில் மிகவும் நாகரீகமாக கூறியுள்ளார்' என்று கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X