Animal 2: “ஆல்ஃபா ஆணாதிக்க உரையாடல் தொடங்கியது..” ரன்பீர் கபூர் கொடுத்த அனிமல் 2 அப்டேட்

சென்னை: இந்தியில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. மேலும் தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், அனிமல் 2ம் பாகம் குறித்து ரன்பீர் கபூர் அப்டேட் கொடுத்துள்ளார்.

அனிமல் 2 அப்டேட் கொடுத்த ரன்பீர் கபூர்
இந்தியில் கடந்த மாதம் 1ம் தேதி வெளியான அனிமல் திரைப்படம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த இந்தப் படம் ஆணாதிக்க திமிருடன் உருவாகியுள்ளதாக பலரும் விமர்சித்திருந்தனர். கோலிவுட்டில் கூட ராதிகா, பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் அனிமல் படத்தை கடுமையாக சாடியிருந்தனர். அதேபோல் பாலிவுட்டிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

 Animal 2: Ranbir Kapoors Animal 2 shooting started

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் சைக்கோத்தனமான நடிப்பு ரசிகர்களை மிரள வைத்திருந்தது. அதுமட்டும் இல்லாமல் 2024ம் ஆண்டுக்கான 69வது ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கு வழங்கப்பட்டது. இதுதவிர மேலும் 4 ஃபிலிம்ஃபேர் விருதுகளை அனிமல் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அனிமல் 2 குறித்து அப்டேட் கொடுத்திருந்தார் ரன்பீர் கபூர்.

அதில், அனிமல் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதனை கடந்து தற்போது அனிமல் 2ம் பாகம் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. நச்சுத்தன்மை வாய்ந்த ஆணாதிக்கம் பற்றி ஒரு ஆரோக்கியமான உரையாடல் தொடங்கியுள்ளது. எப்போதுமே சமூகத்தில் ஒரு உரையாடல் தொடங்காத வரை நாம் அதனை முழுமையாக உணர மாட்டோம். அந்த தவறை தான் அனிமல் படத்தில் காட்டியுள்ளதாக ரன்பீர் கபூர் தெரிவித்தார்.

அனிமல் படத்தில் அப்பா அனில் கபூரின் மீது அதீத அன்பு கொண்ட ரன்பீர் கபூர், சைக்கோத்தனமாக மாறுவதே கதையாகும். இதில் ஆல்ஃபா எனும் ஆணாதிக்கம் குறித்தும் அதன் விளைவுகள் பற்றியும் பேசியுள்ளார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. ஆனால், அதனை சொன்ன விதத்திலும் மேக்கிங், அதீதமான வன்முறை போன்றவைகளாலும் நெகட்டிவான விமர்சனங்களே அதிகம் வந்தன.

படம் முழுவதும் ரத்தம் தெறிக்க தெறிக்க அளவுக்கதிகமான வன்முறை காட்சிகள், பெண்களை அடிமை போல நடத்துவது போன்றவை மீது அதிகம் விமர்சனங்கள் எழுந்தன. பிரபல பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், அனிமல் படத்தில் ஹீரோ ரன்பீர் கபூர் தனது ஷூவை நாக்கால் துடைக்க வேண்டும் என நடிகைக்கு ஆர்டர் போடும் காட்சியை காட்டமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் வில்லன் பாபி தியோல் உயிரிழந்துவிட, இரண்டாம் பாகத்தில் அவரது தம்பி கேரக்டர் ரன்பீர் கபூரை பழிவாங்க காத்திருக்கிறான். இதனால் இரண்டாம் பாதி மீது எதிர்பார்ப்பு இருந்தாலும் இதுவும் அதிகமான வன்முறை காட்சிகளுடன் இருக்குமோ என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X