என்னடா பெரிய அனிமல் வில்லன் என்ட்ரி.. மாங்குயிலே பூங்குயிலே.. கரகாட்டக்காரன் ராமராஜன் தெரியுமா?

சென்னை: கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர், பப்லு பிரித்விராஜ், திரிப்தி திம்ரி உள்ளிட்ட பலர் நடித்த அனிமல் திரைப்படம் அதிகபட்சமாக 900 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. ஏ சான்றிதழ், 3 மணி நேரம் 21 நிமிடங்கள், நெகட்டிவ் விமர்சனங்கள், பிரபலங்கள் எதிர்ப்பு என பல தடைகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து சந்தீப் ரெட்டி வங்காவின் குறி தப்பாமல் அனிமல் படத்தை வெற்றிப்படமாக மாற்றியது.

அந்த படத்தில் முதல் பாதியில் பப்லு பிருத்விராஜ் வில்லனாக நடித்திருப்பார். இரண்டாம் பாதியில் அப்ரார் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் வில்லன் நடிகர் பாபி தியோலின் அறிமுக பாடல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ரீலாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Animal Abrar entry trolled by Ramarajan fans with Karakattakkaran song mixing

அப்ரார் என்ட்ரி: அனிமல் படத்தில் வில்லன் அப்ரார் என்ட்ரியாகும் போது திருமண நிகழ்ச்சியில் ஜமால் குடு பாடல் இடம்பெற்றிருக்கும். அந்த பாடல் தான் தற்போது சோஷியல் மீடியா சென்சேஷன் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு பட்டித் தொட்டி எங்கும் பரவி ஹிட் அடித்துள்ளது. பாலிவுட் நடிகர் பாபி தியோல் திருமணத்துக்கு வந்து ஆட்டம் போட்டு விட்டு ஒரு பெரிய சம்பவத்தை அங்கேயே செய்து அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ரசிகர்களை மிரள வைத்தன.

என்ன ஸ்பெஷல்: அந்த அனிமல் படத்தின் வில்லன் ஆடும் நடனத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான், தர்மேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களே முயற்சித்து ஆடிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அந்த அளவுக்கு அந்த பாடலில் என்ன ஸ்பெஷல் என்றால் சரக்கு கிளாஸை தலையில் வைத்துக் கொண்டு கீழே விழாமல் ஆடுவது தான் குடிமகன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கரகாட்டக்காரன் ராமராஜன் தெரியுமா?: இந்நிலையில், அப்ரர் என்ட்ரி ஜமால் குடு பாடலை போட்டு என்ன பெரிய அப்ரார் என்ட்ரி எங்க ஊரு கரகாட்டாக்காரன் ராமராஜன் தெரியுமா? அந்த காலத்துலயே எவ்ளோ பெரிய கரகத்தை தலையில் வச்சு எப்படி ஆடுறாரு பாருங்க என நெட்டிசன்கள் ஷேர் செய்துள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ராமராஜன் ரசிகர்கள்: மாங்குயிலே பூங்குயிலே என பாடி கரகத்தைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்ட ராமராஜனுக்கு இன்னமும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அசம்பிள் ஆகி அனிமல் அப்ரார் எல்லாம் எங்க ராமராஜனுக்கு கால் தூசுக்கு கூட வரமாட்டார் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கங்குவா வில்லன்: அனிமல் படத்தில் மொரட்டுத் தனமான வில்லத்தனத்தைக் காட்டி படத்தை 900 கோடி வசூலுக்கு கொண்டு சென்ற பாபி தியோல் அடுத்து சூர்யாவின் கங்குவா படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள பாபி தியோல் சமீபத்தில் அவரை டெடி பியர் என்றும் சூப்பரான நடிகர் சூர்யா என்றும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. அனிமல் படம் போல கங்குவா படமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X