விஜய்க்கு வில்லனான பாபி தியோல்.. இயக்குநருக்கு அஜித்.. வில்லனுக்கு சூர்யா.. தளபதி 69 குக்கிங்!

சென்னை: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தளபதி 69 படம் உருவாக உள்ள நிலையில், அந்த படத்தில் நடிக்கப் போகும் நடிகர்களின் அறிவிப்பை இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு அறிவிக்கப் போவதாக கேவிஎன் அறிவித்த நிலையில், ஏற்கனவே கசிந்தது போல முதல் ஆளாக வண்டியில் ஏறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் பாபி தியோல்.

கேஜிஎஃப் படம் தனது பீஸ்ட் படத்தை புரட்டி எடுத்த நிலையில், அந்த படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத்தை லியோ படத்துக்கு இறக்கிய விஜய் தற்போது இயக்குநருக்கு அஜித்தின் ஆஸ்த்தான ஹெச். வினோத்தையும் வில்லனுக்கு சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்துள்ள பாபி தியோலையும் களமிறக்கியுள்ளார்.

thalapathy 69 vijay bobby deol 69


அனிமல் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா வில்லனாகவே மாறிவரும் பாபி தியோல் கங்குவா படத்தைத் தொடர்ந்து தளபதி 69 படத்திலும் வில்லனாக தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறார்.

தளபதி 69ல் பாபி தியோல்: ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 69 படத்தில் விஜய்க்கு மெயின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளார். இந்தியில் எப்படியாவது தனது மார்க்கெட்டை நிலை நாட்டி விட வேண்டும் என லியோ படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் இந்தி பட வில்லனை விஜய் புக் செய்திருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. அனிமல் படத்தில் மிரட்டிய பாபி தியோல் வரும் நவம்பர் 14ம் தேதி கங்குவா படத்தில் அதிரன் எனும் கதாபாத்திரத்தில் கோலிவுட் ரசிகர்களை அல்லு கலங்க வைக்க உள்ள நிலையில், அடுத்து விஜய் படத்திலும் அவர் தான் மெயின் வில்லனே.

சூர்யாவை ஃபாலோ பண்ணும் விஜய்: பொதுவாகவே மார்க்கெட்டில் தற்போது ஹாட் சேல் யாரு என்பதை பார்த்து தான் முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் நடிகர்களை தேர்வு செய்வார்கள். கோட் படத்தில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக வெங்கட் பிரபு 90ஸ் கிட்களின் ஃபேவரைட்களை ஒன்றாக இணைத்திருந்தார். சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோலை அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்திற்கு புக் செய்துள்ள நிலையில், ஹீரோயினும் சூர்யா 44 படத்தின் ஹீரோயின் தான் என்கிற தகவல்களும் அடிபட்டு வருகின்றன.

பூஜா ஹெக்டே: விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹலமதி ஹபிபோ ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டேவுக்கு பீஸ்ட் படத்தில் பெரிதாக வெற்றிக் கிட்டாத நிலையில், தற்போது சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். சமந்தா, மஞ்சு வாரியர் எல்லாம் இல்லை என்றும் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட 2 ஹீரோயின்கள் தான் தளபதி 69ல் நடிக்கப் போவதாகவும் அக்டோபர் 5ம் தேதி படபூஜை போடப்பட்டு ஷூட்டிங்கே தொடங்கி விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் பட இயக்குநர்: அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கிய ஹெச். வினோத்தை தான் தளபதி 69 படத்துக்கே விஜய் டிக் செய்துள்ளார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கவுள்ள நிலையில், இந்தியாவிலேயே ஷாருக்கானை விட அதிகமாக 275 கோடி ரூபாய் சம்பளம் விஜய்க்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு அக்டோபருக்கு தளபதி 69 ரிலீஸ் என்பதையும் இப்பவே விஜய் குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X