Sandeep Reddy Vanga Net Worth: அனிமல் இயக்குநருக்கு ஹேப்பி பர்த்டே.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஹைதராபாத்: இந்திய சினிமாவில் ராஜமெளலிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி இயக்குநராக மாறியுள்ளார் 'அனிமல்' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா. டிசம்பர் 25ம் தேதி சரியாக கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாளில் பிறந்த சந்தீப் ரெட்டி வங்கா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

3 படங்களை மட்டுமே இதுவரை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து மிகப்பெரிய சம்பளத்தையும் சொத்துக்களையும் குவித்து வைத்திருக்கிறார் சந்தீப் ரெட்டி வங்கா. அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தையும் இவர் தான் இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

sandeep reddy vanga birthday net worth

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி ஓவர்நைட்டில் ஒபாமா ஆனது போல இந்திய சினிமாவையே தனது மேக்கிங் ஸ்டைலால் திரும்பிப் பார்க்க வைத்த சந்தீப் ரெட்டி வங்காவின் குடும்பம், சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க.

சந்தீப் ரெட்டி வங்கா பிறந்தநாள்: 1981ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி தெலங்கானாவின் வராங்கல் பகுதியில் பிறந்த சந்தீப் ரெட்டி வங்கா 8வது வகுப்புக்கு மேல் ஹைதராபாத்துக்கு குடும்ப சூழல் காரணமாக இடம் பெயர்ந்தார். பிசியோதெரபி படித்து மருத்துவம் பார்த்து வந்த இவர் தனக்குள் சினிமா ஆர்வம் தோன்ற ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்று சினிமா பள்ளியில் பாடம் படித்து சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். சந்தீப் ரெட்டியின் 43வது பிறந்தநாளை டோலிவுட் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டாடி வருகின்றனர்.

sandeep reddy vanga birthday net worth

100 கோடி சம்பளம்: விஜய் தேவரகொண்டாவை வைத்து தெலுங்கில் இவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தியில் அந்த படத்தை கபிர் சிங் என எடுத்து அங்கேயும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்க கடந்த ஆண்டு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் நடிப்பில் வெளியான அனிமல் படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்து மிரட்டியது. ஒரு படத்துக்கு தற்போது தனது சம்பளத்தை 100 கோடி வரை இவர் உயர்த்தியுள்ளதாக கூறுகின்றனர்.

sandeep reddy vanga birthday net worth

சொத்து மதிப்பு: மனிஷா ரெட்டி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சந்தீப் ரெட்டி வங்காவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது மகனுக்கு அர்ஜுன் ரெட்டி என்றே பெயர் வைத்துள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காத நிலையில், தனது 36 ஏக்கர் மாந்தோப்பையே விற்று அந்த படத்தை உருவாக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இந்தி ரீமேக் 400 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளார். தற்போது ஒட்டுமொத்தமாக சந்தீப் ரெட்டி வங்காவிடம் சுமார் 300 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபாஸ் படம்: சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் படத்துக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் அவரது பாக்ஸ் ஆபிஸ் வெற்றி காரணமாக மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ளார். அடுத்ததாக பிரபாஸை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஸ்பிரிட் எனும் படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X