அனிமல் பட இயக்குநரின் அடுத்த ஹீரோ இவரா?.. இவரை என்னென்ன பண்ணப்போறாரோ?.. ரசிகர்கள் கேள்வி

மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்த பட ஹீரோ குறித்து தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தெலுங்கில் மெகா ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. சேது படத்தின் அப்டேட் வெர்ஷன் என்று அந்தப் படம் கூறப்பட்டாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்களை சேர்த்தது. அந்தப் படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக்கானது. அந்தப் படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி உள்ளிட்டோரை வைத்து சந்தீப் இயக்கிய படம் அனிமல். இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது.

Animal Director Sandeep Reddy Vanga Will Join With Ranveer Singh

கடும் விமர்சனம்: படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். படத்தில் அதீத வன்முறை காட்சிகள், ஆணாதிக்கம் என பல எதிர்மறையான விஷயங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறினர். விமர்சன ரீதியாக படம் பெருத்த அடியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறதாம். உலகம் முழுவதும் 800லிருந்து 900 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

செலிபிரிட்டிகளும் விமர்சனம்: படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்தவர்களே கடுமையான விமர்சனத்தை கொடுத்தனர். பாடக்ர் ஸ்ரீநிவாஸ், 'அனிமல்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் அனிமல்' என்று கூறியிருந்தார். அதேபோல் நடிகை ராதிகாவும் மறைமுகமாக அனிமலை விமர்சித்திருந்தார். அவர்கள் வரிசையில் கங்கனா ரணாவத்தும் தனது பங்குக்கு, 'பெண்களின் கண்ணியத்தை போக்கும்வகையில் சமீபத்திய படங்கள் வெளியாகின்றன' என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும் 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளியிருக்கிறது அனிமல் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் ரெட்டி வங்கா பதில்: கங்கனாவின் இந்த விமர்சனத்தை குறிப்பிட்டு பேசிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, "கங்கனா ரணாவத் திறமையான நடிகைகளில் ஒருவர். அவர் எனது படத்தை விமர்சித்திருப்பதால் எனக்கு கோபமோ, வருத்தமோ இல்லை. எதிர்காலத்தில் நான் இயக்கப்போகும் படத்தில் கங்கனா ரணாவத்தை நடிக்க வைப்ப முயற்சி செய்வேன்" என்று கூறியிருந்தார்.

கங்னா பதிலடி: சந்தீப் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கும் கங்கனா ரணாவத், "தயவு செய்து உங்களின் (சந்தீப் ரெட்டி வங்கா) படங்களில் என்னை நடிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள். அப்படி நடிக்க வைத்தால் ஆணாதிக்கவாதியாக நடிக்கும் உங்களின் கதாபாத்திரங்கள் பெண்களை போற்றுபவர்களாக மாறிவிடுவார்கள். அது உங்களின் படத்திற்குத்தான் நல்லது அல்ல" என்று குறிப்பிட்டிருந்தார்.

ரன்வீர் சிங்: இப்படி பாலிவுட் பக்கம் புயலை கிளப்பியிருக்கும் சந்தீப் ரெட்டி வங்கா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவரின் அடுத்த பட ஹீரோ ரன்வீர் சிங்தான் என்று கூறப்பட்டது. சமீபத்தில் சந்தீப் அளித்த பேட்டி ஒன்றில், ரன்வீர் சிங் அனிமல் படத்தை பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்புகொண்டார். அப்போது அவர் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள்வரை என்னிடம் பேசினார். அதில் படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள குறித்தும் பேசினோம்" என்றார்.

கூட்டணி: அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் சந்தீப் ரெட்டி - ரன்வீர் சிங் கூட்டணி உறுதியாகிவிட்டதோ என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேசமயம் ரன்பீர் சிங்கை ஒரு மாதிரி அனிமல் படத்தில் காட்டிவிட்டார்; ஒருவேளை ரன்வீர் சிங்கை இயக்கினால் அவரை வைத்து என்னென்ன செய்ய சந்தீப் காத்திருக்கிறாரோ என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்ற்னார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X