Animal: "என்னய்யா இது சீன்... இதெல்லாம் ஒரு படமா..?” சூப்பர் ஹிட் மூவியை வெளுத்து வாங்கிய பிரபலம்

மும்பை: பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியானது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேநேரம் படத்தில் இடம்பெற்ற அதீத வன்முறை காட்சிகள் கடும் விமர்சனத்தை சந்தித்தன. இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜாவேத் அக்தர், அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அனிமல் படத்தை விளாசிய பிரபலம்
பாலிவுட்டில் கடந்த மாதம் வெளியான அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம், இதுவரை 900 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ரன்பீருடன் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

Animal: Javed Akhtar questioned the blockbuster success of Animal movie

அதேநேரம் படத்தில் அதிகளவில் ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை காட்சிகள் இருப்பதாக சர்ச்சையானது. அனிமல் மட்டுமின்றி சமீபத்தில் வெளியாகும் படங்களிலும் அளவுக்கு அதிகமாக வன்முறைக் காட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனிமல் படத்தை பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

AIFF எனப்படும் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஜாவேத் அக்தர், அனிமல் படம் குறித்த தனது பார்வையை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் தனது ஷூவை நாவால் துடைக்க சொல்லும் காட்சியை காட்டமாக விமர்சித்தார். இதெல்லாம் ஒரு காட்சியா... இப்படியெல்லாம் ஒரு காட்சியை வைத்து எதை சொல்ல வருகிறார் இயக்குநர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு பெண் ஹீரோவின் ஷூவை நாவால் துடைக்கும் காட்சி என்பதை சகிக்கவே முடியவில்லை. படங்களில் பெண்களை இவ்வளவு கீழ்மையாக நடத்துவதை எப்படி ரசிக்க முடியும் எனவும் விமர்சனம் செய்திருந்தார். இதற்காக கல் நாயக் படத்தில் இடம்பெற்ற ’சோலி கே பீச்சே க்யா ஹை’ பாடலையும் மேற்கொள் காட்டிய அவர், இந்தப் பாடல் ஹிட் அடித்தாலும் இதனை கண்டும் நான் பயப்படுவதாக கூறியுள்ளார்.

அதேபோல், இந்த மாதிரியான படங்களை வரவேற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதில் பார்வையாளர்களுக்கும் பொறுப்பு வேண்டும். இதுபோன்ற படங்கள் வருவதால் அது வரும் தலைமுறைக்கு பாதிப்பு தானே தவிர, இதில் கொண்டாடவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எந்த லாபமும் கிடையாது எனவும் ஜாவேத் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X