Actor Rajinikanth: தலைவர் 171 டைட்டில் ப்ரோமோ ரெடி.. அனிமல் இயக்குநர் கொடுத்த அப்டேட்!
சென்னை: ரஜினிகாந்தின் வேட்டையன் படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக நேற்றைய தினம் லைகா அறிவித்துள்ளது. இதனிடையே வரும் ஜூன் மாதத்தில் தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த்.
இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ வரும் 22ம் தேதி வெளியாக உள்ளதாக லோகேஷ் முன்னதாக அறிவித்துள்ள சூழலில் இந்த படத்திற்கு கழுகு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரே கேரக்டரில் வில்லனாகவும் ஹீரோவாகவும் ரஜினிகாந்த் மாஸ் காட்டவுள்ளதாக கூறப்படும் சூழலில் முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு தரப்பான லைகா ப்ரொடக்சன்ஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ள சூழலில் தொடர்ந்து அடுத்தடுத்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துரிதப்படுத்தி படத்தை அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு தயாராகி உள்ளது. கடந்த ஆண்டில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படமும் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான லால் சலாம் படமும் ரஜினிக்கு சிறப்பாக கை கொடுத்தது.
வேட்டையன் படம்: குறிப்பாக ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்தது. தொடர்ந்து லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தில் ரஜினியின் மொய்தீன் பாய் கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் வேட்டையன் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் போலி என்கவுண்டருக்கு எதிரான படமாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியுடன் இணைந்த அமிதாப்: படத்தில் ரஜினிகாந்த்துடன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வரும் 22ம் தேதி ரிலீசாக உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இந்த பிரமோவிற்கான ஷூட்டிங்கும் தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தலைவர் 171 டைட்டில் பிரமோ: இந்நிலையில் அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தன்னுடைய பேட்டியில் தான் தலைவர் 171 படத்தின் டைட்டில் ப்ரோமோவை பார்த்ததாகவும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள இந்த ப்ரோமோவை தொடர்ந்து தலைவர் 171 படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைவர் 171 படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது தயாராகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த டைட்டில் ப்ரோமோ வெளியாக உள்ள சூழலில் இந்த படத்திற்கு கழுகு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹீரோவும் வில்லனும்: முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மாஸ் காட்டியது. இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு ஷேட்களில் ஒரே கேரக்டராக ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிரடி ஆக்சன் படமாக இந்தப் படம் உருவாக உள்ளதாகவும் இதுவரை இல்லாத அளவில் ரஜினிகாந்தை சிறப்பாக காட்ட உள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் முன்னதாக தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறிய சூழலில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











