சர்ச்சையை கிளப்பிய ‘அனிமல்‘ பட இயக்குநரின் அடுத்த படைப்பு "ஸ்பிரிட்".. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் மற்றும் த்ரிப்தி டிம்ரி நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் "ஸ்பிரிட்". பிரபாஸின் 25ஆவது படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வம்சி மற்றும் பிரமோத்துடன், பூஷன் குமாரின் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு "அனிமல்" படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. ரன்பீர் கபூர், பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ரஷ்மிகா மந்தனா, அனில் கபூர், திரிப்தி திமிரி, பப்லு பிரித்விராஜ், சுரேஷ் ஓபராய் ஆகியோர் நடித்திருந்தனர். அப்பா மீது அதிக பாசம் வைத்து இருக்கும் ரன்பீர் கபூர் ஆடும் பேயாட்டமே அனிமல். இந்த படத்தில் பழிவாங்குதல், வன்முறை, தவறான சித்தரிப்பு என படம் வெளியான போது கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது.

Animal Prabhas Spirit
Photo Credit:

சந்தீப் ரெட்டி வங்கா: "அனிமல்" படத்திற்கு பிறகு, அல்லு அர்ஜுனுடன் ஒரு படம் இயக்க வங்கா திட்டமிட்டிருந்தார். ஆனால், 'ஏஏ24' எனப் பெயரிடப்பட்ட அப்படம் ஒத்திவைக்கப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா என எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. இதையடுத்து சந்துப் ரெட்டி வங்கா, 'ஸ்பிரிட்' படப்பணிகளை தொடங்கி உள்ளார். அந்த படத்தில் "அனிமல்" மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற த்ரிப்தி டிம்ரி, 'ஸ்பிரிட்' படத்தின் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளார்.

ஸ்பிரிட்: இயக்குநர் வங்கா மற்றும் நடிகர் பிரபாஸ் இடையேயான இந்த கூட்டணி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸின் ரசிகர் கூட்டமும், வங்காவின் அதிரடியான திரைப்படத்தை இயக்கும் பாணியும், படத்தின் பெயரும் நிச்சயம் சாதனை படைக்கும். இப்படம் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை சந்தீப் ரெட்டி வங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். 'ஸ்பிரிட்' படம் குறித்த அறிவிப்பு 2022ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அப்போதே இயக்குநர் வங்கா, 'ஸ்பிரிட்' படம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் என்றார். அதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் ஒரு தெலுங்கு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஸ்பிரிட்'' திரைப்படம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறியிருந்தார். அதை இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X