Animal: அடேங்கப்பா.. 500 கிலோ ரியல் மெஷின் கன்னா?.. அப்போ அது சிஜி இல்லையா.. சந்தீப் ரெட்டி சம்பவம்!
மும்பை: அனிமல் படத்தின் டிரெய்லரில் பிரம்மாண்டமான மெஷின் கன்னை வைத்து எதிரிகளை சுட்டுத் தள்ளும் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த சீனை பார்த்த பலரும் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரசாந்த் நீல் படங்களில் பிரம்மாண்ட துப்பாக்கிகள் வருவதை போலவே சந்தீப் ரெட்டி வங்காவும் சிஜியில் ஒரு துப்பாக்கியை போலியாக உருவாக்கி விட்டாரா? என ட்ரோல்கள் குவிந்தன.
கிளைமேக்ஸ் காட்சியில் அந்த சீன் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இடைவேளை காட்சியிலேயே அந்த சீனை சந்தீப் ரெட்டி வங்கா வைத்து பெரிய சம்பவம் செய்து விட்டார்.

பெரியம்மா இல்லை பெரிய ஆயா: ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் சொல்லும் போது கேஜிஎஃப் 2வில் பெரியம்மா என ஒரு துப்பாக்கியை காட்டுவார்கள். இது அதை விட பெரிதாக உள்ளது. ஒருவேளை பெரிய ஆயாவா இருக்குமோ என கிண்டல் அடித்து இருந்தார். ஆனால், அந்தவொரு மெஷின் கன் செய்ய பல மாதங்கள் ஆனதாகவும், அது ஒரு ரியல் மெஷின் கன் போலவே உருவாக்கப்பட்டது என படத்தின் தயாரிப்பாளர் சொல்லி உள்ள விஷயம் தலையை சுற்ற வைக்கிறது.
500 கிலோ எடை: சுமார் 3 மாதங்கள் செலவழித்து சந்தீப் ரெட்டி வங்காவின் கற்பனையான மெஷின் கன்னை ரியலான ஒன்றாக உருவாக்கியதாக படத்தின் புரொடக்ஷன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் அந்த மெஷின் கன் சிஜியா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தியேட்டரே மிரண்டுடுச்சு: இடைவேளைக்கு முன்னதாக இரு சக்கர வாகனம் போன்ற செட்டப்பில் பல ரவுண்டுகள் சுடும் துப்பாக்கியை ரன்பீர் கபூர் ஏறி அமர்ந்துக் கொண்டு எதிரிகளை சுட்டு வீழ்த்தும் காட்சிக்கு தியேட்டரே மிரண்டு போய் விட்டது என்றும் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை நிர்ணயிப்பதே சமீப காலமாக இதுபோன்ற பிரம்மாண்ட துப்பாக்கி சீன் தான் என்றும் கைதி, கேஜிஎஃப் 2, விக்ரம் மற்றும் மார்க் ஆண்டனி அணகொண்டா என பல துப்பாக்கிகள் படையெடுத்து வருகின்றன. அனிமல் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் டைனோசர் துப்பாக்கி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications











