Animal: ஆமாம்.. அத்தனை பேர் கிட்ட இருக்குறது கோடரியா.. குச்சி மிட்டாயா.. அனிமல் ப்ரீ டீசர் கலாய்!

மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள அனிமல் படம் பக்கா வயலென்ஸ் படமாக உருவாகி வருவதாக பில்டப் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வெறித்தனமான அனிமல் ப்ரீ டீசர் என சின்ன க்ளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது.

அதை பார்த்து ஒரு பக்கம் ரன்பீர் கபூர் ரசிகர்கள் கூஸ்பம்ஸ் அடைந்து ஃபயர் விட்டு வரும் நிலையில், சாதாரண ரசிகர்கள் ஏன் டா சண்டை படம்னாலும் ஒரு லாஜிக் வேண்டாமா எனக் கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

Animal Pre Teaser out now: Ranbir Kapoor gets brutally trolled by netizen

அமுல் பேபி டு அனிமல்: பால் வடியும் அமுல் பேபியாக பார்ப்பதற்கே அப்படியொரு சாக்லேட் பாயாக இருந்த ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என டைட்டிலில் படம் எடுக்கப் போவதாக அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் அறிவித்தபோதே ஏகப்பட்ட ட்ரோல்கள் கிளம்பின.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான பிரம்மாஸ்திரம் படத்திலும் அந்த படத்தைக் கெடுத்ததே ரன்பீர் கபூர் தான் என ட்ரோல் செய்யப்பட்டது. ராம்சரண் போன்ற பவர்ஃபுல்லான நடிகர்கள் நடித்திருந்தால் படம் வேறலெவலில் ஹிட் அடித்திருக்கும் எனக் கூறப்பட்டது. கடைசியாக ஷ்ரத்தா கபூர் உடன் லவ்வர் பாயாக ரன்பீர் கபூர் நடித்த படம் செம ஹிட் அடித்த போதும், ரன்பீருக்கு இதுதான் செட்டாகும் என ரசிகர்கள் கூறியிருந்தனர்.

Animal Pre Teaser out now: Ranbir Kapoor gets brutally trolled by netizen

ராஷ்மிகா மந்தனா ஹீரோயின்: அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான குட்பை படம் சுமாராக ஓடிய நிலையில், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

விஜய்யுடன் இந்த ஆண்டு வெளியான வாரிசு படத்தில் கவர்ச்சி பொங்க நடித்திருந்த ராஷ்மிகா அனிமல் படத்தில் எப்படி நடித்துள்ளார் என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஆனால், தற்போது வெளியான ப்ரீ டீசரில் ராஷ்மிகா இடம் பெறாதது அவரது ரசிகர்களை ஏமாற்றியது. ஹீரோக்களுக்குத் தானே எப்போதும் டீசர், டிரெய்லரில் முதலிடம் கொடுக்கப்படும் அதற்கு அனிமல் படமும் விதிவிலக்கு அல்ல என்பதை நிரூபித்துள்ளது.

Animal Pre Teaser out now: Ranbir Kapoor gets brutally trolled by netizen

அனிமல் ப்ரீ டீசர்: 2017ல் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக பாலிவுட்டில் அதே படத்தை கபீர் சிங் என்கிற பெயரில் ரீமேக் செய்து ஷாகித் கபூர், கியாரா அத்வானியை வைத்து இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

இந்நிலையில், அடுத்ததாக ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் அனிமல் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி உள்ள நிலையில், டீசருக்கு முந்தைய ப்ரீ டீசர் தற்போது வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

கோடரியா.. குச்சி மிட்டாயா: கியானு ரீவ்ஸ் நடிப்பில் வெளியான ஜான் விக் படத்தில் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், அதே பாணியில் பாலிவுட்டில் பல படங்கள் உருவாகி வருகின்றன.

தற்போது வெளியாகி உள்ள அனிமல் படத்தின் ப்ரீ டீசரும் அதே உணர்வைத் தான் கொடுக்கிறது. மெட்டல் மண்டை ஓட்டுடன் ஏகப்பட்ட அடியாட்கள் கோட் சூட்டில் கையில் கோடரி வைத்துக் கொண்டு எதிர்த்து வர, தனி ஒருவனாக ரன்பீர் கபூரும் கோடரியை எடுத்துக் கொண்டு உள்ளே புகுந்து அத்தனை பேரையும் ஒரே ஆளாக வெட்டி வீசுகிறார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் கூட்டத்தில் ஒருவனை பிடிக்க எப்படி உள்ளே நுழைந்து எத்தனை அடி மிதி வாங்கி அவரை பிடிப்பார் என்பதை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் தற்போது இப்படி கோடரி வைத்துக் கொண்டு வந்த கொலைகாரர்கள் ரன்பீர் கபூருக்கு வழிவிட்டு அவரை நடுவே வரவழைத்து அவரிடம் வெட்டு வாங்குகிறார்களே, மற்றவர்களிடம் இருப்பது கோடரியா அல்லது குச்சி மிட்டாயா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆனால், இது வெறும் ப்ரீ டீசர் தான் இதை வைத்து ஜட்ஜ் செய்ய முடியாது. அர்ஜுன் ரெட்டி இயக்குநர் மீது நம்பிக்கை உள்ளது. அவர் நிச்சயம் படத்தையே படு மிரட்டலாக கொடுப்பார் என அவரது ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X