எதே மூன்றரை மணி நேரம் படமா.. ரன்பீர் கபூரையும் ராஷ்மிகாவையும் அவ்ளோ நேரம் பார்க்க தைரியம் இருக்கா?

மும்பை: இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி உள்ள அனிமல் படத்தின் ரன் டைம் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகும் படங்களும் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் படங்களும் 3 மணி நேரம் நெருங்கினாலே போதும் போதும் என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு உள்ள நிலையில், அனிமல் படம் சுமார் மூன்றரை மணி நேரம் என ஷாக் கொடுத்துள்ளனர்.

Animal run time will be 3.21 hours shocks fans

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் தரமாக மேக்கிங் செய்திருந்தாலும், அவ்வளவு நேரம் ரசிகர்கள் ஒரு படத்தை ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பார்களா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

அர்ஜுன் ரெட்டி இயக்குநர்: விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது. அந்த படம் தமிழில் ஆதித்ய வர்மா என்றும் இந்தியில் கபீர் சிங் என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

பாலிவுட்டில் கபீர் சிங் படத்தை சந்தீப் ரெட்டி வங்காவே இயக்கிய நிலையில், அந்த படம் 400 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், அடுத்ததாக ரன்பீர் கபூரை வைத்து அனிமல் படத்தை இயக்கி உள்ளார்.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா: கன்னட திரையுலகத்தில் நடிக்க ஆரம்பித்து, தெலுங்கு, தமிழில் கலக்கி வந்த ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் படத்தில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் அந்த படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், அந்த லிப் கிஸ் பாடலும் படத்திற்கான ஹைப்பை அதிகரித்துள்ளது.

ரன் டைம்: இந்நிலையில், அனிமல் படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியூட்டி உள்ளன. படத்திற்கு அதுவே மைனஸ் ஆக அமைந்து விடாமல் இருந்தால் சரி தான் என்று ரசிகர்கள் இப்பவே பயப்பட ஆரம்பித்துள்ளனர். தியேட்டர் ஒனர்களுக்கே இந்த ரன் டைமில் படத்தை வெளியிட்டால் ஒரு நாள் 4 ஷோக்கள் தான் திரையிட முடியும் என்கிற தயக்கத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X