twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈஸ்வரன் பட டீசரை உடனடியாக நிறுத்த வேண்டும்.. விலங்குகள் நலவாரியம் அதிரடி!

    |

    சென்னை: சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படத்தின் டீஸருக்கும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது.

    Recommended Video

    Muslim அவதாரம் எடுத்த Simbu | Maanadu update | FilmiBeat Tamil

    சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் படம் ஈஸ்வரன். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து விட்டது.

    இந்தப் படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    எப்போதும் ஜொள்ளு..இதுக்கு என்னப்பா பேரு? பாழாய்போன நட்பா? பல் இளிக்கும் காதலா? கொதிக்கும் ரசிகர்கள்!எப்போதும் ஜொள்ளு..இதுக்கு என்னப்பா பேரு? பாழாய்போன நட்பா? பல் இளிக்கும் காதலா? கொதிக்கும் ரசிகர்கள்!

    போஸ்டர் டீஸர் ரிலீஸ்

    போஸ்டர் டீஸர் ரிலீஸ்

    ஈஸ்வரன் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாய் ஈடுபட்டுள்ளது. ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீஸர் வெளியானது.

    பாம்பை கழுத்தில் போட்டு

    பாம்பை கழுத்தில் போட்டு

    மோஷன் போஸ்டரில் நடிகர் சிம்பு பாம்பை கழுத்தில் போட்டு கையால் பிடித்திருப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் சிம்பு செம ஸ்லீமாகவும் கெத்தாகவும் இருந்தால் போஸ்டரையே திருவிழாவை போல் கொண்டாடினர் ரசிகர்கள்.

    சிம்பு படத்திற்கு சிக்கல்

    சிம்பு படத்திற்கு சிக்கல்

    இந்நிலையில் இந்த போஸ்டரால் சிம்பு படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. சிம்பு கழுத்தில் போட்டிருக்கும் பாம்பு கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டது என அண்மையில் படக்குழு கூறியது. இருப்பினும் படங்களில் விலங்குகளைப் பயன்படுத்த விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

    உடனடியாக நிறுத்த வேண்டும்

    உடனடியாக நிறுத்த வேண்டும்

    ஆனால் 'ஈஸ்வரன்' குழுவினர் இதற்கான அனுமதியைப் பெறவில்லை என்பதால், வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் மற்றும் டீஸரை உடனடியாக நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    தடையில்லா சான்றிதழ்

    தடையில்லா சான்றிதழ்

    இது தொடர்பாக விலங்குகள் நல வாரியம், விடுத்துள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது, 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரில் கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் பாம்பினை, இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறாமல் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

    7 நாட்களுக்குள் விளக்கம்

    7 நாட்களுக்குள் விளக்கம்

    இது விலங்குகள் நலவாரிய விதிகளுக்கு எதிரானது. எனவே, உடனடியாக இந்த ட்ரெய்லர் மற்றும் போஸ்டரை நீக்கி வேண்டும். இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள், ஏன் உரிய அனுமதி பெறவில்லை என்பதற்கான எழுத்துப்பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. விலங்குகள் நல வாரியத்தின் இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

    English summary
    problem for Simbu's Eeswaran movie.Animal welfare board of India issues show cause notice to Eeswaran movie team. Ordering the movie team to stop immediately the trailer and Poster of the movie, which is carrying graphic generated snake.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X