மீண்டும் பாலிவுட்டில் இசையமைக்கப்போகும் அனிருத்? பிரபல இயக்குநரின் படத்தில் ஒப்பந்தமானதாக தகவல்!

சென்னை: பிரபல இசையமைப்பாளரான அனிருத் மீண்டும் இந்தி படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

VAATHI COMING Sets New Record | Lokesh Kanagaraj, Thalapathy Vijay, Anirudh

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது கமலின் இந்தியன் 2, விக்ரம் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

பாலிவுட்டில் அனிருத்

பாலிவுட்டில் அனிருத்

இதேபோல் தனுஷின் டி44, விஜய்யின் தளபதி 65 ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் படம் ஒன்றில் அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பாலிவுட்டின் பிரபல இயக்குநரான ஆனந்த் எல் ராய், தானே தயாரித்து இயக்கும் படத்தில் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் படு பிஸி

கோலிவுட்டில் படு பிஸி

அனிருத் ஒய் திஸ் கொல வெறிடி பாடல் மூலம் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் பிரபலமானார். கோலிவுட்டில் படு பிஸியாக உள்ள அனிருத் மற்ற மொழிகளிலும் இசையமைப்பது பாடல்களை பாடுவது என இருந்து வருகிறார்.

பிரத்யேக இந்தி படம்

பிரத்யேக இந்தி படம்

பெஜாய் நம்பியாரின் பன்மொழி படமான டேவிட் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் அனிருத். மேலும் டோலிவுட்டிலும் பணியாற்றியுள்ளார். இப்போது, அனிருத் ஒரு பிரத்யேக இந்தி படத்தில் பணியாற்ற உள்ளார்.

இசைக்கு முக்கியத்துவம்

இசைக்கு முக்கியத்துவம்

பிரபல இயக்குநரான ஆனந்த் எல் ராய் தனது படங்களில் இசைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருபவர். அவருடைய தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா, ஜீரோ ஆகிய படங்களில் அவர் இசைக்கு அளித்த முக்கியத்துவத்தை காணலாம்.

அனிருத்திடம் பேச்சு

அனிருத்திடம் பேச்சு

விரைவில் திரைக்கு வரவுள்ள தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அட்ராங்கி ரே படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தனது புதிய புராஜெக்ட்டுக்கு அனிருத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் ஆனந்த் எல் ராய்.

ஆன்போர்டு ஆகிறாரா?

ஆன்போர்டு ஆகிறாரா?

இருப்பினும் இந்தப் படத்தில் அனிருத் ஆன்போர்டு ஆகிறாரா இல்லையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனந்த் எல் ராய் அடுத்ததாக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X