கோலிவுட்டில் மங்காத்தா ஆடும் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான்.. முதல் ஆறு மாசம் நீ.. அடுத்த ஆறு மாசம் நான்!
சென்னை: என்ன இதுவரை அனிருத் மியூசிக் போட்ட படங்களே கோலிவுட்டை இந்த ஆண்டு ஆட்சி செய்து வருகிறதே என்று பார்த்தால், அடுத்த ஆறு மாசத்திற்கு ஏகப்பட்ட பிரம்மாண்ட படங்களுடன் ஏ.ஆர். ரஹ்மான் ஆன் தி வேயில் வந்து கொண்டிருக்கிறார்.
ரோஜா படத்தில் தொடங்கி இன்னமும் அப்படியே ஃபிரஷ் ஆன இசையை கொடுத்து இசை பிரியர்களை தனது மாய விசைக்குள் அப்படியே கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
2கே கிட்ஸ்களின் பல்ஸ் அறிந்து டக்கரான பீட்டுகளை போட்டு டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும் வேலையை பக்காவாக பார்த்து வருகிறார் அனிருத்.

அரபிக் குத்து
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சர்வதேச அளவில் அடித்த டிரெண்டிங்கிற்கே பல இசையமைப்பாளர்கள் இன்னமும் பதில் சொல்ல முடியாமல் உள்ளனர். நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் வெளியாகும் முன்னமே உலகளவில் அசுர ஹிட் அடித்து யூடியூபில் ஏகப்பட்ட ரெக்கார்ட்டுகளை பிரேக் செய்து புதிய ரெக்கார்டுகளை படைத்தது அரபிக் குத்து. ஜாலியோ ஜிம்கானா பாடல் மற்றும் திரை தீப்பிடிக்கும் பாடல்களும் பீஸ்ட் படத்தில் மிரட்டின.

பத்தல பத்தல
விக்ரம் படத்தில் பத்தல பத்தலன்னு பாட்டுப் போட்டு கமல்ஹாசனுக்கு சரியான கம்பேக் மியூசிக் போட்டிருந்தார். நாயகன் மீண்டும் வரான் பிஜிஎம்லாம் தியேட்டரில் ரசிகர்களை புல்லரிக்கவே வைத்து விட்டது. குழந்தைக்கு பால் ரெடி பண்ணும் காட்சிக்கு போர்க் கொண்ட சிங்கம் என ஒரு பாடலை போட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டுக்களையும் அள்ளினார்.

முதல் ஆறு மாசம்
பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் ராக்ஸ்டார் அனிருத் பட்டையை கிளப்பி விட்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடனமாடிய "டூ டூ" பாடல் சிறுவர் முதல் பெரியவர் வரை எழுந்து நடனமாட வைத்தது. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இடம்பெற்ற ஜலபுல ஜங் பாடலும் அதே வேலையை கச்சிதமாக செய்தது. இந்நிலையி,ல் அடுத்த ஆறுமாசத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆஜர் ஆகி உள்ளார்.

அடுத்த ஆறு மாசம்
அனிருத் கோலிவுட்டை ஆட்சி செய்து வரும் நிலையில், அடுத்த ஆறு மாசத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான், தம்பி நானும் களத்தில் இருக்கேன் என கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து பிரம்மாண்ட பாடல்களையும், இசையையும் கொடுக்க ரெடியாகி விட்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் மீம் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











