ஆயிரத்தெட்டு வேலை இருந்தாலும்.. காவ்யா மாறன் உடன் அனிருத் அமெரிக்காவில் என்ன பண்றாரு பாருங்க!

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் நியூயார்க் வீதிகளில் ஒன்றாக நடந்து செல்வது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், அனிருத் அதனை மறுத்திருந்தார். இந்நிலையில், இருவரும் அமெரிக்காவில் ஒன்றாக சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நியூயார்க்கில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்ட வீடியோ, ஒரு பிரிட்டிஷ் யூடியூபரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோ வெளியான உடனேயே, அனிருத் மற்றும் காவ்யா இடையிலான உறவு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, இது குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Anirudh and Kavya Maran spotted at New York city sparks dating rumours

இந்த சந்திப்பின்போது, இருவரும் மிகவும் கேஷுவலாக இருந்ததாகக் கூறப்படுகிறது. யாரும் அவர்களை அணுகி புகைப்படம் எடுக்க முயலவில்லை. இது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டாலும், அவர்களது உறவு குறித்து அனிருத்தோ அல்லது காவ்யாவோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அமெரிக்காவில் அனிருத் - காவ்யா மாறன்: அமெரிக்காவின் நியுயார்க் நகரில் காவ்யா மாறன் உடன் அனிருத் வலம் வந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது அவர்களுக்கு முதல் முறையல்ல; இதற்கு முன்பும் பலமுறை அனிருத்தும் காவ்யாவும் பொது இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில், இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல வதந்திகள் பரவின.

மறுத்த அனிருத்: ஆனால், இந்த வதந்திகளை அனிருத் ரவிச்சந்தர் திட்டவட்டமாக மறுத்தார். ஜூன் மாதம் தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில், "திருமணமா? சிரிப்பு... அமைதியாக இருங்கள் நண்பர்களே. வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டு, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த யூகங்களைத் தவிர்க்கும்படி ரசிகர்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொண்டார்.

படங்களில் பிஸி: அனிருத் ரவிச்சந்தர் இசையில் கடைசியாக மதராஸி திரைப்படம் வெளியானது. மேலும், அடுத்த மாதம் வெளியாகவுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும், பொங்கலுக்கு வெளியாக காத்திருக்கும் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். சமீபத்தில், வெளியான தளபதி கச்சேரி பாடல் 40 மில்லியன் வியூஸை கடந்து விரைவில் 50 மில்லியனை தட்டித் தூக்கும் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.

அனிருத் டேட்டிங்?: இந்நிலையில், காவ்ய மாறன் உடன் அனிருத் டேட்டிங் செய்து வருகிறாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்திலும் அனிருத் தான் இசையமைத்து வரும் நிலையில், தொழில் ரீதியான சந்திப்பாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக அனிருத் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்தார். ஆனால், இருவருக்கும் இடையே ஒத்துப்போகாத நிலையில், இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது காதல் வதந்திகளில் அனிருத் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X